விதையாய் விழு -- அரவிந்த் C

முற்றுப்புள்ளி வைத்து
வெறும் வாக்கியமாய்
உன் வாழ்க்கை
முற்று பெற வேண்டுமா...?
இல்லை
காவியமாய் உன் வாழ்க்கை
கற்கப்பட வேண்டுமா...?
விடைகள்
உன் கை விரல்களில்

வியர்வையில்
உன் வாழ்க்கையை
விதைத்திடு
வெற்றியை அறுவடை செய்திடலாம்....

நிகழ்காலத்தில்
உழுது விதைத்திடு
உன் உழைப்பை,
எதிர்காலம் செழிப்படையும்...

தோற்றுவிடுவாய்
என்றெண்ணி
முயற்சிக்காமல் இருப்பது தான்,
மிகப் பெரிய தோல்வி...

நாளை நாளை
என்னும் சொல்லை
மறந்து விடு,
இல்லையேல்
இன்றையை வீணாக்கிவிடுவாய்....

அவமானங்களை அங்கீகரிக்க
மறுத்து விட்டால்,
வெற்றியை
அடையாளம் காண இயலாது...

விழுவது
தவறல்ல மனிதா..
வெறும் உடலாய்
விழுவதே தவறு...

விதையாய் விழு
என்றோ ஒரு நாள்
விருட்சமாய் எழுவாய்....!

எழுதியவர் : அரவிந்த் . C (10-Nov-14, 8:46 pm)
பார்வை : 307

மேலே