என் காதல்

"என் இமை தேடிய
விழிகள் அவள்!
கரை தொடும்
அலையைப் போல
என் நிழல் தேடும்
பாவையானாள்!
என் நெஞ்சாங்கூட்டில்
நாழிதனைப் பாராது
சிறகடிக்கும்
தேகப் பறவையானாள்!
மல்லிகையாய் மணக்கும்
சிரிப் பூவில்
தையலவள் என்னையும்
சேர்த்தே தைத்திடுவாள்!
மையல் கொண்டதும்
மனதோடு இளப்பாறி
தேசம் தன்னை
மறந்திடுவாள்!
என் காதலவள்!
கண் இமைக்கும்
நொடியில் பூக்கும்
வஞ்சியவள்
என் காதல்...!!!"