வாழ்க்கை வாழ்வதற்கே

இன்பத்தில் துள்ளும் போதும்..,
துன்பத்தில் துவளும் போதும்..,
அன்பின் மழைதனில் நனையும் போதும்..,
பிரிவின் தீயில் வேகின்ற போதும்..,
வெற்றியின் மடியில் தவழும் போதும்..,
தோல்வியின் வழியில் தடுமாறும் போதும்..,
ஊர் போற்றும் போதும்..,
உலகம் தூற்றும் போதும்..,
வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்
வாழ்வின் எந்தவொரு நிலையின் போதும்..!!
ஏன் என்றால்...,
வாழ்க்கை வாழ்வதற்கே..!!


கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (16-Nov-14, 3:32 pm)
சேர்த்தது : சரண்யா
பார்வை : 84

மேலே