இது மூன்றாம் பால் இல்லம்

பூக்ககளமோ இது போர்க்களமோ
பூக்களும் மூர்ச்சித்து போகுமோ
தேக்கடியோ இல்லை தேன்கடியோ
தேவதைகளும் வந்து நாணுவரோ

பகலா இரவா தெரியா பொழுதில் யோசிக்கிறேன்
அசலா நகலா தெரியா நிலவை நேசிக்கிறேன்
பின்னம் இரு தாமிர சருவங்கள்
முன்னம் இரு வெட்டிய பட்டுத் துணிகள்
கன்னமிரண்டும் காமனின் கப்பல்கள்
கள்வெறி கூட்டும் கரைபுரண்டோடும்
பிரம்மச்சரிய தெப்பங்கள்
வானவில் வளைவு மேடுகள்
வாழ்க்கை அர்த்தம் சொல்லும் நெளிவு சுளிவுகள்

கடலா மடலா தெரியா ஒன்றில் விழுந்தேன்
கரை தெரியவில்லை
படலா திடலா எதிலோ ஒன்றில் புரண்டேன்
பொழுது விடியவில்லை

கூட்டலும் கழித்தலும் சேருமிடம்
கூட்டிக் கழித்தால் பூஜ்யம் வரும்
மீட்டலும் சுருங்கலும் காணுமிடம்
மானம் சற்றே ஒய்வு கொள்ளும்

நாணலைப் பிடித்து பெண்ணாக்கி
நடனம் சொல்லிக் கொடுத்ததது யாரு
பாணப் பட்டரின் வித்தையை
பார்வையில் வைத்து தைத்தது யாரு

அலையும் மனது அலையிடை படகாச்சு
மலையும் தோற்கும் முலையும் தங்க குடமாச்சு
கலையும் அதில் விளையும்
திராட்சை குலையும் சுவையில் அழியும்

மடலைப் பார்த்து கைமடலைப் பார்த்தேன்
விடலை வயசு விடலை மனசு
கடலைப் போல அது முதலைப் போல
விடலை விடலை முற்றும் இழந்தேன் ..

எழுதியவர் : சுசீந்திரன். (18-Nov-14, 12:56 am)
பார்வை : 83

மேலே