அறியாமல்
தேடிச் செல்கிறேன்
விடியலை-என்
கண்கள் குருடானது
அறியாமல்
பேசிக் கொள்கிறேன்
பைந்தமிழை -என்
வாய் ஊமையானது
அறியாமல்
கட்டிக் கொள்கிறேன்
உன்னை -நீ
என்னை விட்டுப் பொனது
அறியாமல்
அழுது கொள்கிறேன்
கண்களால்-கண்களின்
நீர் வற்றியதனை
அறியாமல்

