கப்பலோட்டிய தமிழன்
திருநெல்வேலி சீமையிலே
ஓட்டப் பிடாரமேனும் ஊரினிலே
ஆயிரத்து என்னூற்றெழுபத்திரண்டிலெ
பிறந்த தமிழ் சிங்கமது
வ.உ.சிதம்பரம் பிள்ளைஎனும் பேருடனே!
வழக்குரைஞர் பணி செய்கையிலே
நாட்டு விடுதலை போராட்ட வேட்கையிலே
திலகர் போன்ற தீரருடன் இணைந்தார்
இளவல் சிதம்பரமே!
வெள்ளையனுக்கு எதிராக
சுதேசிக் கப்பல் ஒன்றினை நமக்கெனவே
வாங்கி வந்து சுயமரியாதை நாட்டிடவே
கொடுமைகள் பரிசாய் பெற்றாரே!
கப்பலோட்டிய தமிழன் அவர்தன்னை
சிறையில் அடைத்த வெள்ளையரும்
அவரை செக்கிழுக்க வைத்தனரே!
சுப்பிரமணிய சிவா மற்றும்
சிங்கம் நிகர் பாரதியும்
தோழர்கள் என்று ஆயினரே!
சிறையினில் கொடுமைகள் அனுபவித்து
வெளியினில் வந்தவர் வறுமையினால்
வாழ்ந்ததும் கண்டது பாரதமே!
தமிழினில் நூல்களும் இயற்றியவர்
நாட்டின் விடுதலை காணுமுன்
மடிந்தாரே!
செக்கிழுத்த செம்மல் என
விளங்கியதோர்
தமிழ் பெருமகன் வ.உ.சி,.
நினைவு தினம் இன்றென்பதனால்
நினைந்து அஞ்சலி செலுத்திடுவோம்..
இளைய தலை முறைக்கு
இவரை நினைவு படுத்திடுவோம்..!

