அம்மா

கருவறையில் தெய்வமாய் பார்த்தாய்
பிறந்த கணம் முதல் உன் நிழலாய் காத்தாய்
அழுகின்ற பொழுதெல்லாம் அரவணைத்தாய்
பத்து மாதம் கருவில் சுமந்தாய்
நடை பழகும் வரை தோளில் சுமந்தாய்
அம்மா என்றவுடன் ஆனந்தம் அடைந்தாய்
அள்ளி அனைத்து முத்தமும் தந்தாய்
அழுகும் போது சிரிக்க வைத்தாய்
சிரிக்கும் போது சிறகடித்து பறந்தாய் !.....