கொஞ்சம் வார்த்தை நிறைய கற்பனை - சந்தோஷ்

மின் தொடர்வண்டியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கவிதை எழுதுவது என்றால் எனக்கு அப்படியொரு கொள்ளை ஆசை..! அப்படி எழுதியதில் சில வரிகள்..!


---

இதழில் வெளிவந்த காற்று
துளையில் உள்புகுந்து மாற்றியது
மூங்கில் குழாயை
புல்லாங்குழலாய்...!


--

உலக மேதாவிகளின் மொத்த
சிந்தனைகளை ஒட்டுமொத்தமாய்
உள்வாங்கி செழிக்கிறது
நூலகத்தில் கரையான்கள்

--

வீணை எரிந்தால்
தீ தந்தியை மீட்டினால்
எழுவது எந்த ராகமோ ?

-----------------------------------------


என் கவிதை பூமியில்
விதையாக புதைத்திருக்கிறேன்
உன்னையும் , உன்னோடு
என் காதலையும்...!

பெண்ணே..! -உன்
நெஞ்சில் ஈரமிருந்தால்
கொஞ்சம் சிந்திவிட்டுப்போ...!

செழித்து வளரட்டுமே
என் கவிதை மட்டுமாவது..!!

---

ஒரு வட்டம் வரைந்து
இது
நம் காதல்வானின்
நிலா என்றேன் நான்..!

இல்லை இது
வெற்று பூஜ்யம்
என்றாய் நீ...!

அடியே..! என் காதலியே..!
என்னைபோலவே
நீயும் சிந்தித்து பழகு...!

இரு முட்டாள்களின்
கூட்டணிக்கு பெயர்தான்
காதலாம்...!



----

இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Dec-14, 4:32 pm)
பார்வை : 127

மேலே