தாயாவது உறங்கட்டும்

நீங்களும் என்னை
விழுங்கி இருக்கலாம்
பிறந்தவுடனே
பாம்பு பூனைகளை போன்று ...

திரியவிட்டு இருக்கிறீர்கள்
எங்களை
சாலைகளில்
வயிற்று பசியுடன் ...
உங்கள் உடற்பசியை தீர்ப்பதற்காக ...

நிழலாய் இறைவன்
பின்தொடர்ந்தாலும் ...
உதவிக்கரங்கள்
பலர் நீட்டினாலும் ....

சக நண்பர்கள்
தாயின் கைபிடித்து
தத்தி தத்தி செல்லுகையில்
நெஞ்சம் கனக்கிறது
உன்னைப்பற்றிய ஏக்கத்தில்

சரியாக உறங்கமுடியவில்லை
இச்சிறு வயதிலையே
என்னை புறக்கணித்த ungalukavathu
thookkam வருகிறதா முறையாக?

கோடை பயிராய்
நான் வாடினாலும்
வேண்டுகிறேன் இறைவனிடம்
என் தாயையாவது உறங்கவிடு

a.venkatesan

எழுதியவர் : அக.வெங்கடேசன் ஏகாம்பரம் (5-Dec-14, 11:23 pm)
பார்வை : 111

மேலே