மலரின் மனம்

கல்லறைக்கும்
கடவுள் சிலைக்கும் ,
கழுத்திற்கும்
கருங்கூந்தலுக்கும் ,
திருமணத்திற்கும்
தேர்வலத்திற்கும்,
கட்சிகாரனுக்கும்
கட்டையில் போரவருக்கும்..
மணம்வீசும் என்னை பறித்து
விலைபேசி பணம் கேட்டு
பச்சிளம் பாலகரின்
பாதியேனும் பசிபோக்கும்
ஏழைத்தாயின் ஏக்கத்துக்காய்
இறப்பு வேண்டி பிறக்கின்றோம்
மணம்வீசி மகிழ்விக்க அல்ல
பசிபோக்கி மரணிக்க....!