கடவுளை தேடிய என் பயணம்

நாத்திகம் பேசும் நான்
கடவுளை தேடி புறப்பட்டேன் .

தெருக்கோடியில் தென்பட்டாள்
வறண்டு வாடிய முகத்தோடு
வாழ்கையை தொலைத்த பெண்ணொருத்தி
கண்டேன் முதல் கடவுளை
கடந்து சென்றேன் கண்டுகொள்ளாமல் .

தொடர்ந்தேன் தேடலை
பேருந்தின் சன்னல் ஓரத்தில்
வசதியாக அமர்ந்துகொண்டேன்
வேடிக்கையாய் வெளியே நோக்கையில்

வேர்வையில் குளித்து
வெயிலில் காய்ந்து
கூனு தள்ளிய முதுகில்
குப்பையை சுமக்கும் கிழவனின்
உருவில் கண்டேன் உண்மை கடவுளை
கடந்து சென்றேன் கண்டுகொள்ளாமல் .

பேருந்தை விட்டு இறங்கி
தொடர்ந்தேன் தேடலை

ஆடம்பர உணவகத்தில்
வயிறு புடைக்க உணவருந்தி
வெளியேறும் தருணத்தில்
வயிறு பசிக்கு தர்மம்
வேண்டிய பிஞ்சிக்கு
வடையை தர்மம் செய்து திரும்புகையில்

தர்மத்தை நாய்க்கு தானம் செய்த
யாசகன் உருவில் கண்டேன்
உணவளிக்கும் கடவுளை
கண்டுகொள்ளாமல் கடந்து சென்றேன் .

எதிரில் முதியோர் இல்லம்
தேடலின் முடிவாய் சென்றேன் அங்கும்
அட ஆச்சர்யம் !
அனைத்து கடவுள்களும் ஓர் இடத்தில் .

சிவனும் அல்லாவும்
சிரிப்பை மறந்து
இயேசுவும் புத்தனும்
கண்ணீரில் கரைந்து..

கண்டேன் கடவுகளை
அன்பினை தேடும்
அனாதைகளாய் .
கண்டதில் ஒன்றை புரிந்துகொண்டேன்
கடவுள்கள் இருக்கின்றார்கள்
ஆனால் நாம் கண்டுகொள்வதேயில்லை .

எழுதியவர் : கயல்விழி (27-Dec-14, 2:01 pm)
பார்வை : 177

மேலே