அனேகன்
உங்க பக்கத்து வீட்டுககாரரோட பேரென்னடா?
அவரு பேரு கருப்பையா. எதுக்கு கேட்ட?
இங்கே பல பேரிடம் விசாரிச்சேன். அவரு பேரு அனேகன்னு தான் எல்லாரும் சொல்லறாங்க.
நான் இந்த வீட்ல பத்து வருஷமா குடியருக்கேன். அவருகிட்ட புதுசா யாரு அறிமுகமானாலும் பழகின சில நாட்களிலே கொஞ்சங்கூட கூச்சம் இல்லாம தந்திரமாப் பேசி கடன் வாங்கிடுவாரு. அப்பறமா பொறுமையா இழுத்தடிச்சு கொஞ்சங் கொஞ்சமா பணத்தைத் திருப்பித் தருவாரு. இப்பிடி அநேகம் (அனேகம்) பேருகிட்ட கடன் வாங்கியே எங்க பகுதிலே பிரபலமாகி அனேகன்ங்ற பட்டப் பேரையும் சம்பாதிச்சிட்டாரு.
இப்பப் புரிதடா அனேகன் கதை. இவரு கதையத் தான் அனேகன்னு படம் எடுககறாங்களோ என்னவோ.

