நின்திருமுகத்தை காட்டிவிடு

அன்னையிடம் பருகிட்ட அமிர்தமதை
ஆயுளுக்கும் சுவைத்திட அவாகொண்டு
அழைக்கின்றேன் அன்புத்தமிழ் மலர்தொடுத்து
அன்பே வருக வருகவென ......

செந்தமிழ் நடை கொண்டு
வண்ணத்தமிழ் வார்த்தையில்
தேன்தமிழ் சாறெடுத்து
தெவிட்டாத கவிதனை
தினமொன்றாய் தொடுத்துக்கோடு

தொன்மைமிக்க தென்தமிழில்
பண்புமிக்க பாசத்தமிழில்
பால்போன்ற சொல்சேர்த்து நெஞ்சுருகம்
பாச்சரத்தை நிதம்நூறு வடித்துக்கொடு ..

மின்னலை மிளிரவைக்கும் ஒளிகொண்ட
மென்மைத்தமிழின் ஒற்றைச் சொல்லில்
மூழ்கி முத்தெடுத்து முனைந்த
மூக்கிற்கு ஒற்றைக்கல்
மூக்குத்தியினை குத்திவிடு ... .

அறுசுவை கொண்ட அன்னமும் பருகும்
அருமைத்தமிழில் ஆயிரம் அர்த்தம்புதைந்த
அய்யன் வள்ளுவனின் வரிதனில்
அழகிய வளவிரண்டை மாட்டிவிடு

நீ!
முத்தமிடும் நுதலுக்கு சந்தம்கொண்ட
முத்தமிழில் மையிடு ....
சத்தமிடும் இதழுக்கு நிறமாற
நற்றமிழில் சாயமிடு ....

நீ !
கதைபேசும் காதிற்கு சீர்மிகு
கன்னித்தமிழில் கம்மலிடு
வருடிவிடும் கூந்தலுக்கு வாடாத
வாசத்தமிழில் பூச்சூடு ..

இதுபோதுமெனக்கு இனியதமிழ் தாரெடுத்து
இன்றே நீ வந்துவிடு இனிநாம் பிழைப்பிற்கு
இறவாத தமிழிருக்கு எதிர்காலமும்
அதிலுருக்கு முக்காலமும் தவிக்கின்ற
தாமரைக்கு நின்திருமுகத்தை காட்டிவிடு ...
.

எழுதியவர் : ப்ரியாராம் (2-Jan-15, 2:20 pm)
பார்வை : 104

மேலே