கனவு

மதவேழம் நடமாடும் திட நெஞ்சை சிதை செய்ய
அதில் பூத்த அணுப்பூவும் நீதானோ பெண்ணே !
உன் குழலீறு நுதல்த்துண்டு பிறையோடு ஒருசேர
முழுத் திங்கள் தான் தோன்றுதோ !!

கயலோடு கயல் மோதும் இரு வாயின் மருப்போடு
இசைந்தாடும் குமிழ் திலகமோ !
அதன் வழியேறி வரைநின்று குதிக்கின்ற தேன்கிண்ணம்
இதழ் என்னும் செவ்வாழியோ !!

குழல் செய்யும் இள மூங்கில் நரம்போடு வளைந்தாடும்
கரமென்னும் இரு வீணையோ !
அதனசைவிற்கு ஜதி போடும் இருதாளம் இணை மெய்யின்
இளவாழை உன் கால்களோ !!

இவையாவும் நான் கூற வழி எந்தன்
துயில் நின்ற கலையாத நின்காட்சியே !
அது கலையாமல் நிலைசெய்யும் பணியாக
தமிழ் கொய்து பாமாலை நான் யாக்கிறேன் !!

எழுதியவர் : ரா. அருண் தர்ஷன் (2-Jan-15, 1:29 pm)
Tanglish : kanavu
பார்வை : 238

மேலே