ரா அருண் தர்ஷன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரா அருண் தர்ஷன் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 12-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 287 |
புள்ளி | : 25 |
தோன்றிமறையும் பொழுதுகளில் ஆழியவளைத் தொட்டோங்கும் ஆதவன் நான்.
மூழ்கித் திளைத்த அத்தனை ப்ரியங்களைக் கடந்தும் வழியும் இறுதித்துளியில் உன் ஆயிரம் பிம்பங்கள் தெறிக்கும் ப்ரியமானவளே!
அத்தனைக்கும் மூத்தவள் நீ..
அத்தனைக்கும் ஆதாரம் நீ..
மங்கிய ஒளியில், மயங்கும் கீதத்தில், பின்னிராப் பொழுதுகளின் கனவுப் பிரசவத்தில், உதட்டோர உளறல்களில், விழிவழி நினைவுநீர்ச் சுரப்புக்களில் உன் உருவும் பெயரும் இரண்டிருந்திராவென்றால் மந்தகார இவ்வுலகின் முழுமுதற் பொய்யனென என்னையே எண்ணிக்கொள்ளலாம்..
இப்படிக்கு
நான்
கருவானம் பிழி வழிய
பிறை யொளியும் படரெரிய
அரிராமர் உடை வில்கீழ்
திசை துள்ளும் இளமான்கள்
குரங்குடமை குமிழ் கதையும்
கிடை துஞ்சும் ஈர்கொவ்வை
ஒரு சேர ஐவிரலால்
ஏந்தியதாய் எம் பாவாய்
கருவானம் பிழி வழிய
பிறை யொளியும் படரெரிய
அரிராமர் உடை வில்கீழ்
திசை துள்ளும் இளமான்கள்
குரங்குடமை குமிழ் கதையும்
கிடை துஞ்சும் ஈர்கொவ்வை
ஒரு சேர ஐவிரலால்
ஏந்தியதாய் எம் பாவாய்
முன்கோபக் கனற்பிழம்பின்
முக்காற்பங்கை
எனக்காகத் தான்வாங்கித்
தாழா நிலையில்
வெம்மை தீர் குளிர்வதனங்
காட்டத் தழலில்
தன்னுடல் உருகுருள்
தங்கக் குமிழாம்..
என்றோ எவனோ தோண்டிப் புதைத்த
புதையலின் செய்தி செவிவழி கேட்டு
வறுமையின் நிமித்தம் கிளம்பினன் தேடி
நரம்புகள் புடைத்த பாலையின் மறவன்
செல்லும் வழியில் பகலவன் மறைய
கருங்கடல் இறங்கி அலைகளை வருடி
கரைவரி துள்ளும் கயல்களைக் கடந்து
ஒற்றைப் பாதை சிறுமலை யேறி
இருகரை மோதும் செங்கய மிறங்கி
சிறு வெள்ளாம்பல் மதுவொடு மூழ்கி
கருங்களி துஞ்சும் முதலை அன்ன
வெஞ்சுரம் சிறிதொடு தொடரும் பயணம்
பாதை வழியே மேடொரு பள்ளம்
மீண்டும் தோன்றும் இருமா மேரு
வருங்களை யோடு பசியுந் தூண்ட
திணை மாமதுவொடு குழைந்தாச் சுன்னம்
பிசைந்துண் டுறங்கினன் அம்மலை தன்னில்
நெடுநிரை தாண்ட வழியொரு பாலை
நடுநிலை கண்டனன் கா
என்றோ எவனோ தோண்டிப் புதைத்த
புதையலின் செய்தி செவிவழி கேட்டு
வறுமையின் நிமித்தம் கிளம்பினன் தேடி
நரம்புகள் புடைத்த பாலையின் மறவன்
செல்லும் வழியில் பகலவன் மறைய
கருங்கடல் இறங்கி அலைகளை வருடி
கரைவரி துள்ளும் கயல்களைக் கடந்து
ஒற்றைப் பாதை சிறுமலை யேறி
இருகரை மோதும் செங்கய மிறங்கி
சிறு வெள்ளாம்பல் மதுவொடு மூழ்கி
கருங்களி துஞ்சும் முதலை அன்ன
வெஞ்சுரம் சிறிதொடு தொடரும் பயணம்
பாதை வழியே மேடொரு பள்ளம்
மீண்டும் தோன்றும் இருமா மேரு
வருங்களை யோடு பசியுந் தூண்ட
திணை மாமதுவொடு குழைந்தாச் சுன்னம்
பிசைந்துண் டுறங்கினன் அம்மலை தன்னில்
நெடுநிரை தாண்ட வழியொரு பாலை
நடுநிலை கண்டனன் கா
சந்தணம் குழையும் சாந்தின் நிறத்தில்
பிறந்தாய் என்று சொன்னாள் அம்மா
காக்கையும் தம்மகன் பொன்மகன் என்னும்
பழஞ்சொல் முழுதாய் அறியா வயதில்
அகவை ஐந்து முடிந்த பருவம்
பள்ளியின் படியை மிதித்த சிறுவன்
ஆண்டொரு பத்து முடித்து மீண்டும்
காதலின் பள்ளி வழுக்கி வீழ்ந்தான்
கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்
எனப்பொருட் கூறுவர் பார்ப்புகழ் நூலோர்
காதலுங் கற்கப் பெருங்கவி ஆவாய்
என்றவன் காட்டினான் அச்சிறு வயதில்
எது எதிர்பார்ப்பினும் தோல்வியில் முடியும்
வரமும் அவனின் அழியாச் சொத்து
அகம்முதல் முளைத்து துளிர் விட்டெழுந்த
காதலும் அதற்கு விதிவிலக் கல்ல
இரண்டாம் தடவை பெருங்கிளை கடந்து
எட
முத்தமிழும் முத்தமிடும்
(இ)லக்கணமோ (இ)லக்கியமோ !!
ஓன் குத்தும் விழி சுத்தயிலே
வெத்துவெளி வரையுதடி..
அத்தனையும் நா(ன்) படிக்க - ஓன்
ஆச மொகம் பாக்கயிலே
பித்தனையே பாத்ததுபோல்
சட்டுனுதா(ன்) திரும்பிக்கிட்ட..
எப்படியும் படிச்சிடனு(ம்)
எண்டு மனம் தவிச்சிருக்க
வட்டமிடும் மானினப்போல்
விட்டு இடம் மறைஞ்சிபுட்ட
நித்தமெல்லா(ம்) ஓன் நெனப்பு - என்
சித்தமதில் கெறங்கயிலே
சொற்பகனம் நா(ன்) படிச்ச - அந்த
வித்தயத்தான் கொட்டுறனோ ??
முத்தமிழும் முத்தமிடும்
(இ)லக்கணமோ (இ)லக்கியமோ !!
ஓன் குத்தும் விழி சுத்தயிலே
வெத்துவெளி வரையுதடி..
அத்தனையும் நா(ன்) படிக்க - ஓன்
ஆச மொகம் பாக்கயிலே
பித்தனையே பாத்ததுபோல்
சட்டுனுதா(ன்) திரும்பிக்கிட்ட..
எப்படியும் படிச்சிடனு(ம்)
எண்டு மனம் தவிச்சிருக்க
வட்டமிடும் மானினப்போல்
விட்டு இடம் மறைஞ்சிபுட்ட
நித்தமெல்லா(ம்) ஓன் நெனப்பு - என்
சித்தமதில் கெறங்கயிலே
சொற்பகனம் நா(ன்) படிச்ச - அந்த
வித்தயத்தான் கொட்டுறனோ ??
முத்தாழி கரை மோதும்
குரு மண்ணில் தாழாட
தொடுவானம் நான்காண வேண்டும்.
சிறு கூட்டம் தரைகூட்டி
விளையாடும் மணல் வீட்டில்
மனம் சென்று குடியேற வேண்டும்.
மலர் மொய்க்கும் சிறு வண்டு
யாழ்மீட்டும் இசைவந்து
செவியோரம் உறவாட வேண்டும்.
கவிபாடும் இளந்தென்றல்
மலரோடு மனம்வீசி
உயிருக்குள் நகங்கீர வேண்டும்.
இவையாவும் நிறைவேறா விதிவந்தும் துயரில்லை - என்
இடப்பாகம் நீயிருந்தால் போதும்...
தற்செயலா ஓன் நெனப்பு
என் தவநெலயில் தெறிக்கயிலே;
நவமிரண்டில் நட்ட - நம்ம
நாட்கள் கண்ண உறுத்துதடி ...
திட்டமிட்டே செய்தபிழ
சத்தியமா ஒண்ணுமில்ல
கூட ஓரு தருணம் வந்தும்
பாவி மனம் எணங்கவில்ல ...
காலம் பல கடந்திருந்தும் - நம்
காதல் தடம் பொறண்டிருந்தும்
ஓன் நெனப்பு மட்டும் வெலகலியே !
என் சொப்பணத்தில் வந்தவளே !!
இத்தன நாள் சேத்து வச்ச
பக்தி மொத்தம் தந்துப்புட்டேன்
சக்தி அவ தொணயினிலே - நீ
பத்திரமா இருப்ப யடி ...
மதவேழம் நடமாடும் திட நெஞ்சை சிதை செய்ய
அதில் பூத்த அணுப்பூவும் நீதானோ பெண்ணே !
உன் குழலீறு நுதல்த்துண்டு பிறையோடு ஒருசேர
முழுத் திங்கள் தான் தோன்றுதோ !!
கயலோடு கயல் மோதும் இரு வாயின் மருப்போடு
இசைந்தாடும் குமிழ் திலகமோ !
அதன் வழியேறி வரைநின்று குதிக்கின்ற தேன்கிண்ணம்
இதழ் என்னும் செவ்வாழியோ !!
குழல் செய்யும் இள மூங்கில் நரம்போடு வளைந்தாடும்
கரமென்னும் இரு வீணையோ !
அதனசைவிற்கு ஜதி போடும் இருதாளம் இணை மெய்யின்
இளவாழை உன் கால்களோ !!
இவையாவும் நான் கூற வழி எந்தன்
துயில் நின்ற கலையாத நின்காட்சியே !
அது கலையாமல் நிலைசெய்யும் பணியாக
தமிழ் கொய்து பாமாலை நான் யாக்கிறேன் !!