சொப்பணத்தில் வந்தவளே

தற்செயலா ஓன் நெனப்பு
என் தவநெலயில் தெறிக்கயிலே;
நவமிரண்டில் நட்ட - நம்ம
நாட்கள் கண்ண உறுத்துதடி ...

திட்டமிட்டே செய்தபிழ
சத்தியமா ஒண்ணுமில்ல
கூட ஓரு தருணம் வந்தும்
பாவி மனம் எணங்கவில்ல ...

காலம் பல கடந்திருந்தும் - நம்
காதல் தடம் பொறண்டிருந்தும்
ஓன் நெனப்பு மட்டும் வெலகலியே !
என் சொப்பணத்தில் வந்தவளே !!

இத்தன நாள் சேத்து வச்ச
பக்தி மொத்தம் தந்துப்புட்டேன்
சக்தி அவ தொணயினிலே - நீ
பத்திரமா இருப்ப யடி ...

எழுதியவர் : ரா. அருண் தர்ஷன் (10-Jan-15, 9:59 pm)
சேர்த்தது : ரா அருண் தர்ஷன்
பார்வை : 79

மேலே