மீட்டல்

முத்தமிழும் முத்தமிடும்
(இ)லக்கணமோ (இ)லக்கியமோ !!
ஓன் குத்தும் விழி சுத்தயிலே
வெத்துவெளி வரையுதடி..

அத்தனையும் நா(ன்) படிக்க - ஓன்
ஆச மொகம் பாக்கயிலே
பித்தனையே பாத்ததுபோல்
சட்டுனுதா(ன்) திரும்பிக்கிட்ட..

எப்படியும் படிச்சிடனு(ம்)
எண்டு மனம் தவிச்சிருக்க
வட்டமிடும் மானினப்போல்
விட்டு இடம் மறைஞ்சிபுட்ட

நித்தமெல்லா(ம்) ஓன் நெனப்பு - என்
சித்தமதில் கெறங்கயிலே
சொற்பகனம் நா(ன்) படிச்ச - அந்த
வித்தயத்தான் கொட்டுறனோ ??

எழுதியவர் : ரா. அருண் தர்ஷன் (5-Feb-15, 8:55 pm)
பார்வை : 86

மேலே