தமிழச்சியின் தமிழ் பாசம்

தமிழை தவறாக கூறாதே...
தமிழ் - என் தாய்
என் தாயை
தவறாக கூறினால் !
நான் பொருத்துக்கொள்வேனா ?

நான் குழந்தையில் இருந்து
குமரி ஆனாலும்
கிழவி ஆனாலும்
தமிழச்சி தான் ...

தமிழச்சியின்
தமிழ் பாலை...
நான் நுகரவில்லை !
மாறாக
நுரையீரலில்
ஆர்ப்பரிக்கும்
மூச்சுக்காற்றாய் ....
நான் நாசி வழியே
சுவாசிக்கிறேன்...!

எத்தனை பிறவி
எடுத்தாலும்...
தமிழச்சியாய்
பிறக்க வேண்டும்
இல்லையேல்
பிறவாமை வேண்டும்...


~ இப்படிக்கு
தமிழச்சியாய் பிறந்து தமிழச்சியாய் மரணிக்க நினைக்கும்
தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Feb-15, 7:31 pm)
பார்வை : 149

மேலே