தமிழுக்கு அமுதம் தவறு

தமிழுக்கு அமுதென்று
தப்பு தப்பாய்ச் சொன்னது
யார்?....
"அளவுக்கு மிஞ்சி விட்டால்
அமிர்தம்கூட நஞ்சாகும்"
தமிழென்ன அப்படியா?
தத்துவம்தான் மெய்ப்படியா?
இல்லை இல்லை
இப்படியே........
என்னை யாரும் கேட்கலயே...
முத்தமிழே முத்தமிழே!
மூன்று காலம் நீதானே!
முக்கடவுள் மூச்சுவிட
காரணமும் நீதானே!
செந்தமிழே செந்தமிழே!
செங்கடலும் நீதானே!
செத்துப்போன உடல்கூட
செவி சாய்க்கும் உனைக்கேட்க..
கன்னித் தமிழில் பாட்டிசைத்தால்
காதுக்குள்ளே தேன்கூடு..
ஒப்பிடத்தான் ஏதுண்டு
என் தங்க தமிழோடு!
இப்படித்தான் சொன்னாலும்
இணையுண்டோ எவ்விடத்தில்?
யாரேனும் கண்டாலும்
போட்டுடையும் என்னிடத்தில்.....