பெண்
பெண்
பெண் என்று எண்ணாதே
பேதை என்று சொல்லாதே
போதை பொருளாய் கொள்ளாதே
பொறுமையை தூண்டி பார்க்காதே
தூய்மையாக உள்ளவளை
துச்சமாக எண்ணி
தூரிகையும் இல்லாமல்
துகில் உரிக்க செய்வாயோ
கையில் சிலம்பெடுத்தாள்
கண்ணகியும் அன்று
கண்களில் கனலெடுப்பாள்
கன்னியும் இன்று
உதிரத்தை உள்வைத்து
உயிர் கொணர்ந்தோம்
உதிரத்தை வெளிகொணர்ந்து
உயிர் மாய்ந்தோம்
படைப்பதையும் காப்பதையும்
யாம் செய்தோம்
இனி
பார்வேண்டின்
அழித்தலுக்கும் அஞ்சோம்

