நாளைய தமிழும் தமிழரும்பொங்கல் கவிதைப்போட்டி 2015
கோலமிட்டு வாழ்ந்த எம்மினம்...
காலம் கண்ட நவீனமென்றே
சீலம் கெட்டுப் போய்விடுமோ?
கீலமாய் நெஞ்சதுவும் பிளந்திடவே...-அறிவு
மூலங்கள் யாவும் முடங்கிட நினைக்கின்றதோ?
பாலமாய் பரிணமிர்த்தே எம் தமிழ்- நவ
உலகில் உன்னதமாய் ஊடகம் யாவிலும்
இலகுவிலே உலாவிவரும்..
கலப்படங்கள் யாவையுமே கடந்தும் - நன்
நலங்கு பூசி மினுங்கிவரும்..
ஆலம் விழுதென தொங்கி.
பலமான அறுகு வேரென ஓடி- சீர்
கலசமென்றே இணையம் யாவிலும்
விலாசம் பேசிவரும் எம்மினம் -புது யுக
இலக்கியம் படைத்திடுமே..
காலம் வென்று கவிபாடி
தாளலயம் தளராமல்
கலையுலகில் நிலை பெற்று
விலையுயர்ந்து வித்தகம் விதிர்த்திடும்
வளமான விதையிடு விருட்சமல்லோ- தமிழர்
புலமெதுவாயினும் பூத்திடும் விதையல்லோ-தமிழ்
இக் கவி எனது சொந்த படைப்பு என உறுதிப்படுத்துகிறேன்.
அஜந்தா ஜினி பகீரதன்
29 வயது
யாழ்ப்பாணம்
இலங்கை
0094 779 672 058