ஒரு வெண்பா உருவாகிறது

நான் தந்த புதுக்கவிதை வரிகளை வெண்பாவாக்கித் தந்தார் கவித் தோழி
ஷ்யாமள ராஜசேகர் தொடர்ந்த கருத்துரையாடலில் ஒரு வெண்பா எப்படி
உருவாகிறது என்று பாருங்கள். நுணுக்கமான வெண்பா விதிகளை
ஷ்யாமளா ராஜசேகர் விளக்கும் விதம் அழகு
வெண்பா விழைவோருக்கு இது உதவும்.

யாமறிந்த கணினி கவித் தளங்களில்
எழுத்தினைப் போல் பிரிதொன்று கண்டிலோம் !
ஆதலினால் ஈதல் குணமுள்ள தமிழ் வள்ளல்களே
நல்கிடுவீர் நற்கவிதை நாளும் நயந்து !


Shyamala Rajasekar • 17-Aug-2014 7:33 pm
எழுத்துபோல் மற்றொன்று எங்குண்டு சொல்வீர்
குழுவாய் தளந்தனில் கூடி - வழுவில்லா
கற்கண்டு சொல்லால் கவிஞர்காள் ! நல்கிடுவீர்
நற்கவிதை நாளும் நயந்து.

KalpanaBharathi • 17-Aug-2014 9:22 pm
WELCOME வெண்பா தோழியே !
சிறப்பான ஒரு தனிச் சொல் வெண்பா மிகவும் அழகாக வரைந்திருக்கிறீர்கள்
சொல்வீர் நல்கிடுவீர் --வெண்பாவின் செப்பலோசைக்கு அணி செய்கிறது .
எனது வெறுங் கவிதையை கவித்தா தன வழியில் சிறப்பான வெண்பா
ஆக்கித் தந்திருக்கிறார் . நான் இன்னொரு வடிவமைப்பைத் தந்திருக்கிறேன்
அது வருமாறு

யாமறிந்த கணினி கவிததளங்கள் தனிலே
நாமறிந்த எழுத்தினைப் போலொன்று கண்டிலோம் ! -ஆதலினால்
ஈதல் குணமுள்ள வள்ளல்களே நல்கிடுவீர்
காதல் கவிதை நாளும் நயந்து !
---இதில் பிழை இருக்கிறது . நீங்கள் அறிவீர்கள் . பிழை திருத்தி
நற்பா ஆக்கித் தர வேண்டுகிறேன்


Shyamala Rajasekar • 17-Aug-2014 10:20 pm
இதைத்தான் நான் திருத்த நினைத்தேன் கல்பனா ....ஆனால் எனக்கு சரிவரவில்லை ....!!
அதனால் தான் சற்று மாற்றி அமைத்தேன் ....வெண்பாவாக ....!!

யா மறிந் த - நேர் நிரை நேர் - கூவிளங்காய்
காய் முன் நேர் வரவேண்டும் . ஆனால் இங்கு நிரை வந்துள்ளது .
கணி னி - நிரை நேர் - புளிமா .....
இதுபோல் சில பிழைகள் .....
ஈற்றடி முச்சீராய் வரவேண்டும் .
இரண்டாம் அடியில் நான்காம் சீரில் இரண்டாம் எழுத்தும் முதல் இரண்டு வரிகளின் முதல் சீரின்
இரண்டாம் எழுத்தோடு ஒன்றி வரவேண்டும் ..
முதல் மற்றும் மூன்றாம் சீரின் மோனை ஒன்றி வருதல் சிறப்பு .....!!

நம்ம ஆசான் திரு .காளியப்பன் ஐயா அவர்கள் வந்தால் அழகாய் மாற்றித்தருவார்கள் .
கல்பனா ! நான் இன்னும் கத்துக்குட்டியே ....!!

இருந்தாலும் என்னை மதித்து கேட்டதற்கு மிக்க நன்றி ...!!
வேறு சந்தேகம் இருந்தால் கேட்டால் சொல்கிறேன் எனக்குத் தெரிந்தால் .....!!

உங்கள் கவிதை அழகாய்த்தானே இருக்கிறது ....!
பின் ஏன் மாற்ற வேண்டும் ? திருத்த வேண்டும் ....??

KalpanaBharathi • 18-Aug-2014 9:21 am
யா மறிந் த - நேர் நிரை நேர் - கூவிளங்காய்
காய் முன் நேர் வரவேண்டும் . ஆனால் இங்கு நிரை வந்துள்ளது .
கணி னி - நிரை நேர் - புளிமா .....
இதுபோல் சில பிழைகள்
-----உண்மை
ஈற்றடி முச்சீராய் வரவேண்டும் . ------முற்றிலும் சரி
மாச்சீர் விளச்ச்சீர் க்காயச்சீர்களே வெண்பாவில் அனுமதிக்கப் பட்டவை
கனிச் சீருக்கு வெண்பாவில் அனுமதி இல்லை . வள்ளல்களே -- நேர் நேர் நிரை
ஆகி கனிச் சீர் பெறுகிறது . மாற்றவேண்டும்
கணினி ---இக் கனி னி என்றால் காய் முன் நேர் பெறுமா ?
வள்ளல்களே ---நிரை ஒதுக்கி நேராக்குவோம். வள்ளல்காள் ---காய்ச்சீர் தானே ?
கவிஞர்களே தவிர்த்து கவிஞர்காள் என்ற தொன்மைச் சொல்லாட்சி காய்
கருதித்தானே பெய்தீர்கள் ?
காதல் கவிதை நாளும் நயந்து ----நாளும் விலக்கி முச்சீராக்குவோம்
பெறப்படும் வடிவம்


யாமறிந்த இக்கணினி கவிததளங்கள் தனிலே
நாமறிந்த எழுத்தினைப் போலொன்று கண்டிலோம் ! -ஆதலினால்
ஈதல் குணமுள்ள வள்ளல்காள் நல்கிடுவீர்
காதல் கவிதை நயந்து !
---இபொழுது முற்றிலும் வெண்பா ஆகிவிட்டதா இல்லையா ? இல்லையென்றால்
இதற்கு இன்னும் என்ன தேவை . பரிந்துரைக்க வேண்டுகிறேன் வெண்பா தோழி !

வெண் மலர்கள் கையில் கொடுத்தாள் நன் மாலை ஆக்குவாள் தோழி !
வெறும் பாவைக் கையில் கொடுத்தாள் வெண்பா ஆக்குபவளும் தோழியே !

கத்தும் கடல் மிகப் பெரிது
கத்து(ம்) குட்டிகளின் கவிதை
கடலினும் மானப் பெரிது

"உங்கள் கவிதை அழகாய்த்தானே இருக்கிறது ....!
பின் ஏன் மாற்ற வேண்டும் ? திருத்த வேண்டும் ....?? "
----அதை வெண்பாவாக பார்க்க வேண்டும் என்ற அவா.

காத்திருக்கிறேன் வெண் பா மாலைக்கு
reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
Shyamala Rajasekar • 18-Aug-2014 8:33 pm
கல்பனா ! நீங்கள் எழுதிய வெண்பாவில் இரண்டாவது அடியில்
ஐந்து சீர்கள் உள்ளனவே .....!! வேறு சில மாற்றமும் செய்துள்ளேன் .
இந்த மாலை பிடித்திருக்கிறதா தோழி ??

யாமறிந்த இக்கணினி பாத்தளங்கள் தன்னிலே
நாமறிந்த சொர்க்கம் எழுத்தேதான்!- ஏமமுடன்
ஈதல் குணமுள்ள வள்ளல்காள் நல்குவீர்
காதல் கவிதை நயந்து .
reply Vote Up Vote Down 1 வாக்குகள்
user photo
KalpanaBharathi • 18-Aug-2014 10:45 pm
ஆதலினால் ஐ அகற்றி விடுவோம் . நிரை நீக்க கவித்தலங்களை பாத்தளங்கள்
ஆக்கியிருக்கிறீர்கள் . நன்று . ஏற்கிறேன் .காய் முன் நிற்கும் நிரை நீக்க
எழுத்தினை இவ்வெழுத்தை என்று ஆக்கலாமா ?

யாமறிந்த இக்கணினி பாததளங்கள் தன்னிலே
நாமறிந்த இவ்வேழுத்தைப் போலில்லை ஒன்று
ஈதல் குணமுள்ள வள்ளல்காள் நல்கிடுவீர்
காதல் கவிதை நயந்து !
-----முழு வெண்பா அமைதி இப்பொழுது நல்கிவிட்டேனா ?
உங்கள் இரு வெண்பாக்களும் உங்கள் கற்பனையில் மிகச் சிறப்பாக
அமைத்திருக்கிறீர்கள் . எந்த ஐயமும் இல்லை. மேலும் சில சொல்லவேண்டும்
உங்கள் பொன்னான நேரத்தை வெண்பாவுக்கு ஒதுக்கி இங்கு வரவேண்டும் என்று
உங்களை வரவேற்கிறேன் வெண்பாத் தோழி


Shyamala Rajasekar • 19-Aug-2014 8:39 am
வந்து விட்டேன் அன்புத் தோழி !
மேலேயுள்ள வெண்பாவில் இரண்டாம் அடியில் ஈற்றுச்சீர் - ஒன்று சரிவராது இல்லையா ?
அதனால் மாற்றிவிட்டேன் ....!!

யாமறிந்த இக்கணினி பாத்தளங்கள் தன்னிலே
நாமறிந்த இவ்வெழுத்தைப் போலுண்டோ கோமானே
ஈதல் குணமுள்ள வள்ளல்காள் நல்கிடுவீர்
காதல் கவிதை நயந்து !

KalpanaBharathi • 19-Aug-2014 10:03 am
போலில்லை ஒன்று ---இரண்டிற்கும் அசை விளக்கம் தராமல் மாற்றி
விட்டீர்கள் . எவ்வசைப் பிழை கண்டீர் ? சொல்லவும்
போலுண்டோ ----நேர் நேர் நேர் ----ஏற்போம்.
கோமானே ---நெடில் வரிசை . சரி எனக்கு இந்தச் சொல் வேண்டாம். சுதந்திரம்
கண்டு குடியரசு ஆகிவிட்டது. இங்கே கோமான் யார் ?
நண்பனே அல்லது தோழனே பொருந்துமா ?
அடுத்த பதிலுடன் வெண்பாவிற்கு மங்களம் பாடிவிடலாம் என்று நினைக்கிறேன் .
பார்ப்போம் . உங்கள் வெண்பா ஆர்வத்தையும் அவாவையும் மனமுவந்து
பாராட்டுகிறேன்

Shyamala Rajasekar • 19-Aug-2014 11:06 am
சொல்கிறேன் தோழி ....! இதில் பொருட்குற்றம் ஏதுமில்லை .அழகாகவே இருக்கிறது ....!
ஒன் று - நேர் நேர் -தேமா .....மா முன் நிரை தானே வரவேண்டும்
அடுத்த வரியில் ஈதல் என்று மாச்சீருடன் வந்துள்ளதே ....!!
கல்பனாவுக்கு உடன்பாடு இல்லையெனில் அதையும் மாற்றிவிடலாம் .

யாமறிந்த இக்கணினி பாத்தளங்கள் தன்னிலே
நாமறிந்த இவ்வெழுத்தைப் போலுண்டோ கோமளமே
ஈதல் குணமுள்ள வள்ளல்காள் நல்கிடுவீர்
காதல் கவிதை நயந்து !

கல்பனாவுக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் என்னிடம் கேட்பது ....
எனக்கு பயிற்சி கொடுக்கவா ??
நல்லாயிருக்கு விளையாட்டு ....!!

KalpanaBharathi • 19-Aug-2014 5:15 pm
எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் என்னிடம் கேட்பது ....
---அப்படி ஒரு மேதாவி நானில்லை .

எனக்கு பயிற்சி கொடுக்கவா ??-----உங்களுக்கு நான் பயிற்சி கொடுப்பதா ?
இங்கே நூறு பேர்களுக்கு நீங்கள் பயிற்சி கொடுக்காலாம். வெண்பா வாழும்.
வெண்பா விதியை விரல் நுனியில் வைத்துக் கொண்டு அசை திருத்தி
சீர் நேராக்கி தகுந்த மாற்றுச் சொல் பெய்து இந்த வெண்பா மலரை வளர்த்த
பெருமை உங்களையே சாரும் .


உங்கள் கவிதை அழகாய்த்தானே இருக்கிறது ....!
பின் ஏன் மாற்ற வேண்டும் ? திருத்த வேண்டும் ....??
----நீங்கள் சொன்ன இந்தக் கூற்று உண்மை மிகச் சரி.
இனிமையான ஒரு புதுக் கவிதையை வெண்பாவாக மாற்ற முயலும் போது
நமக்குப் பிடித்த சில சொற்களை தியாகம் செய்யவேண்டியதிருக்கிறது
பிடித்ததோ பிடிக்காததோ சில சொற்களை இலக்கண விதி கருதி செருக
வேண்டியதிருக்கிறது. இதனால் மூலக் கவிதையின் மணமும் குணமும்
குறைந்து போகிறது.மாறாக வெண்பா விதிக்குட்பட்டே சிந்தித்து எழுது
வோமானால் கவிதை சுவையாக இனிமையாக வரும் என்று நினைக்கிறேன்
எழுத்துப் பேழையில் மேலும் சில முத்து வெண்பா மாலைகள் சேர்ப்போம்
மிக்க மகிழ்ச்சி ; மனமுவந்த பாராட்டுக்கள்.
மிகவும் நன்றி வெண்பா சியாமளா !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா ஷ்யாமளா (8-Jan-15, 10:54 pm)
பார்வை : 340

மேலே