நாளைய தமிழும் தமிழரும் பொங்கல் கவிதை போட்டி 2015
தன்னிகரில்லா தமிழா! நீ தன்னடக்கமென்று
தாழிக்குள் விழுந்து விட்டாய்!
புதைந்து போகட்டும் பழமையென
தமிழையும் ஏன் தள்ளிவிட்டாய்?
இரண்டாம் நூற்றாண்டில்
இயங்கிய தமிழ் இதுவல்லவே!
இறந்துப்போன நூற்றாண்டுகளின்
எச்சம் போல வாழுதே!
உலகின் உண்மை அளந்து
உயர்ந்த இனம் இதுவல்லவே!
உணர்வற்றுப்போன உங்களை நம்பி
உரிமைக்கு போராடுதே!
உடம்பில் உதிரம் ஓடுதெனில்
உணர்வும் கொஞ்சம் இருக்குதெனில்
உன் தலைமுறைக்கு தமிழூட்டு!!
இனி பெருகட்டும் தமிழூற்று!!
மூர்ச்சையுற்ற முத்தமிழ் முகம் கழுவட்டும்
முண்டாசு கவிஞன் மூச்சு விடட்டும்
அகமும் புறமும் அகிலம் ஆளட்டும்
தமிழும் தமிழரும் தன்மானம் காக்கட்டும்
இலக்கியம் கொண்டு இதயம் நிரம்பட்டும்
இருளை நீக்கி இமைகள் விழிக்கட்டும்
இந்த நிமிடம் வெள்ளி முளைத்து
ஈழம் நாளை விடியல் காணட்டும்...
*************************************************************************************************************************************************************
இந்த கவிதைக்கு நானே முழு உரிமையாளரென்று உறுதி அளிக்கிறேன்.
பெயர்: வீ. சீதளாதேவி.
வயது: 20.
வதிவிடம்: 1/15,மெயின்ரோடு,
அன்னவாசல்,
சேங்காளிப்புரம் அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்,
612 604.
நாடு: இந்தியா(தமிழ்நாடு).
அழைப்பிலக்கம்: 887 005 7196.
*************************************************************************************************************************************************************