நாளைய தமிழும்,தமிழரும்
இன்றைய தலைமுறை
இயங்குவதே கணிணியில்!
இவர்களுக்கு தமிழ்
தவிப்பு,திணறல்!
நாளைய தமிழன்
தமிழிலேயே பேசி
குழந்தைகளை அழகிய
தமிழ் மகனாய்,தமிழ் மகளாய் வளர
பண்பாடு,கலாச்சாரம்,உபசரிப்பு,
கற்றுக் கொடுத்தால் ?
இன்றைய தமிழன் தானே
நாளைய தமிழனும் ஆகிறான்!
இன்று நீ,
உன் மனத்தில் தமிழை விதைத்தால்,
நாளைய தமிழனிடத்தில்அறுவடை செய்யலாம்!
நான் மாறினால் நீ மாறுவாய்!
நீ மாறினால்,இன்னொருவர்!
திருக்குறள் சொல்லாத
எதையும்,யாரும்,
எப்போதும்,எங்கேயும்
சொல்லிவிட முடியாது
தினம் ஒரு திருக்குறள்
வாசித்து நடந்தால்
நீயும் வாழ்வாய்! தமிழும் வாழும்!