நாளைய தமிழும் தமிழரும் ‍- பொங்கல் கவிதைப் போட்டி 2015

இன்றைய தேதியில்
எத்தனை பேருக்கு தமிழை சரியாக‌
எழுதத்தெரியும்..?

எத்தனை பேருக்கு ஆங்கிலம் கலக்காமல்
சுத்தத்தமிழில் பேசத்தெரியும்?

யாராவது சரியாக திருத்தமாக
தமிழ் பேசினால் அவரைப்பார்த்து
வெட்கம் இல்லாமல் சிரிக்கத்தெரியும்...!

தமிழ் இங்கேயே இப்படி இருக்கும் போது
எப்படி அகிலத்தை ஆளும்.?

வெட்டு குத்து கொலை கொள்ளை கற்பழிப்பு
என்ற செய்தி இல்லாத தமிழ் பத்திரிக்கை
என்று வரும்..?

தனக்குள்ளேயே இத்தனை
வேண்டாதவைகளை வைத்துள்ள தமிழன்
நாளைய தலைமுறைக்கு
சொல்லிக்கொடுப்பது தான் என்ன?

தமிழை இன்றாவது...
இல்லை இல்லை இன்றே மதிப்போம்...
தமிழருக்குள்ளாவது சமாதானம் வளர்ப்போம்

இப்படி நடந்தால்
நம் மண்வாசனை விண்ணை எட்டும்
நாளை தமிழும் வாழும்
நாளைய‌ தமிழரும் வாழ்த்துவர்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (12-Jan-15, 11:21 pm)
பார்வை : 521

மேலே