காதல் பைத்தியம்

'' தென்றலே நீ எத்தனை முறை
அழித்தாலும் நான் எழுதிகொண்டுதான்
இருப்பேன் என் காதல் கவிதையை -காற்றில்

கடல் கரைதாண்டி வராவிடிலும்
கரை மீது நுரைகக்கி செல்வது போல்-
என் காதலை நீ கொள்ளாவிடிலும்
உன் காதில் புகுத்துவது - என் கடமை ...

காதல் ... காதல் ....காதல்

சுவாசிக்க சுவாசிக்க சுகமாத்தான் இருக்கு
காற்றை அல்ல காதலை ...

முகம் சுளிக்காமல் பார்ப்பதால் தான்
மலர்கள் அழகு ..!

வீண் முறைப்புகள் ஏனடி ..?

யானையின் முன் கரும்பு தோட்டம் போல்
என் முன் நீ , பசிக்குதடி உணவு வேண்டாம்
உணர்வு கொடு , காதல் உணர்வு கொடு ..!

ஏன் இந்த முணுமுணுப்பு ..

கிளிக்கு மட்டும் இல்லை - சிறகு
காக்கைக்கும் உண்டு ,
காதலும் அப்படி தான்
கருப்பர்களும் காதலிக்கலாம் ......

இறைவா காதலை படைத்த கையுடன்
காமத்தை ஏன் படைத்தாயோ..
கடற்கரை காதல் செய்யவா ?
அவள் என் காதலை மறுக்க
அதை தான் கரணம் காட்டுகிறாள் ....

நான் தினம் சூடும் மலர்
நான் பிணம் ஆகி போனாலும்
வாடாத சிறக்கும் மலர் ..!

காதல் காதல் !! வேறென்ன ..

.... சுஜிமோன் ..

எழுதியவர் : சுஜிமோன் (13-Jan-15, 11:26 pm)
சேர்த்தது : sujimon
பார்வை : 75

மேலே