sujimon - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sujimon |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : 09-Mar-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 1334 |
புள்ளி | : 255 |
நீர் விழுந்து நிலம் செழித்துபயிர் முளைக்க பயன் பெறட்டும் என் பாரதம்...அணு உடைத்து ஆயுதம் படைத்து பலம் காண்பித்தால் பயப்படாதோ மானுடம்!
கொடுப்பதில் கர்ணனாய்
இருந்த போதும் -என்னிடம்
கஞ்சத்தனம் செய்யும் உன் பார்வைக்காய் காத்திருக்கின்றது
விழிகள் .
இளையராஜாவும் எம்.எஸ்.வியும்
இணைந்தே என்னுள் இசையமைக்கின்றார்கள்
என்னை நீ கடந்துசெல்லும்
இரண்டொரு நொடிகளில் .
உன் தினக்குறிப்பேட்டை
தினமும் முத்தமிட வைக்கிறது எச்சில் தடவப்பட்ட
பக்கங்கள் .
காதறுத்த உன் செருப்பும்
என் மஞ்சத்தோடு ஒட்டிக்கிடக்கிறது
பரதனின் ஆட்சி பீடத்தில்
ராமரின் அடையாளமாய் .
அதிகாலை பனியின் இதமான சுகத்தை மிஞ்சி என் கன்னத்தோடு ஒட்டிக்கொள்கின்றது
குழந்தைக்கென நீ கொடுத்த
பறக்கும் முத்தம் .
தலையணைகள் தன்னை தழுவுதலுக்கு தடைவிதித்துவி
குலசேகரத்தான் இம் மண் அரசே
பெயர் காரணம் இதுவே..
கண் கொண்டு காக்கும்
வேதமுத்துமலை அம்மன் என்பர் சிலர் ..
கணினி கொண்டு வான் ஆயும்
ISRO என்பர் சிலர் ....
சுழலும் பம்பரத்தில்
ஆண்மீகம் தேடுவதும்
அறிவியல் தேடுவதும்
அறியாமை அல்ல ...
சொல்வது குலசை !
கடல் காளி , கருமாரி
தாய் வாழும் ஊரே ..
நிலம் காக்க , நிழல் காக்க
கணை ஏவும் ஊரே ..
பனை உண்டு , பதம் உண்டு
வினை தீர்க்க துணை உண்டு
தசரா கொண்டாட்டம் தரணியின்
புகழ் உண்டு ...
செம்மொழி சீர் உண்டு
வஞ்சத்தில் குறைவு உண்டு
சிங்காரம் மேலோங்க
மங்காத பேர் உண்டு..
தெற்கு சீமையில்
நிக்கும் ஊர் இது
குமரி கண்
குலசேகரத்தான் இம் மண் அரசே
பெயர் காரணம் இதுவே..
கண் கொண்டு காக்கும்
வேதமுத்துமலை அம்மன் என்பர் சிலர் ..
கணினி கொண்டு வான் ஆயும்
ISRO என்பர் சிலர் ....
சுழலும் பம்பரத்தில்
ஆண்மீகம் தேடுவதும்
அறிவியல் தேடுவதும்
அறியாமை அல்ல ...
சொல்வது குலசை !
கடல் காளி , கருமாரி
தாய் வாழும் ஊரே ..
நிலம் காக்க , நிழல் காக்க
கணை ஏவும் ஊரே ..
பனை உண்டு , பதம் உண்டு
வினை தீர்க்க துணை உண்டு
தசரா கொண்டாட்டம் தரணியின்
புகழ் உண்டு ...
செம்மொழி சீர் உண்டு
வஞ்சத்தில் குறைவு உண்டு
சிங்காரம் மேலோங்க
மங்காத பேர் உண்டு..
தெற்கு சீமையில்
நிக்கும் ஊர் இது
குமரி கண்
கட்டிடம் நீச்சல் பழகுகிறது
கட்டியவன் படகு பயணத்தில் ..!
காகித கப்பல் நான் மழையில்
விட்டு இருக்கிறேன் மழலையில்,
இன்றோ மழையால் கட்டுமரம் கரையில்
மிதக்கிறது ..!
கண்டேன் கலங்கிய விழிகொண்டு ..!
ஆற்றின் குறுக்கே அணை போல்
வீடுகள் .. நதி வாழும் இடத்தில்
நான் வாழ்வேன் என்றல்
விதி என்ன செய்யும் ..
இன்றோ ..
உன் காகித கப்பல்
ஓடம் ஏறியது
உன் படுக்கை அறையில்
பாம்பு தூங்குகிறது
உன் சொகுசு வாகனம்
குளத்தில் ஒதுங்கியது
உன் கணினியும் காய்கறியும்
கரை தேடுகிறது
உன் குழந்தையின் கல்வி
தூரம் நிற்கிறது
உன் பதவி பணம் பவுசு எல்லாம்
பாதி குறைந்து
மீதியாய் நிம்ம
தட்டு தடுமாறி போய் ..
வியர்வையை விற்றேன் விலகவில்லை
உரு குலைந்து போய் ..
உதிரத்தை விற்றேன் விலகவில்லை
சிதைந்து போய்
சிறுநீரகம் விற்றேன் விலகவில்லை
உடைந்து போய்
உடலுறுப்பை விற்றேன் .. ம் .. ம்
விலகியது
வறுமை அல்ல உயிர் !
--சுதா கண்ணன்
கட்டிடம் நீச்சல் பழகுகிறது
கட்டியவன் படகு பயணத்தில் ..!
காகித கப்பல் நான் மழையில்
விட்டு இருக்கிறேன் மழலையில்,
இன்றோ மழையால் கட்டுமரம் கரையில்
மிதக்கிறது ..!
கண்டேன் கலங்கிய விழிகொண்டு ..!
ஆற்றின் குறுக்கே அணை போல்
வீடுகள் .. நதி வாழும் இடத்தில்
நான் வாழ்வேன் என்றல்
விதி என்ன செய்யும் ..
இன்றோ ..
உன் காகித கப்பல்
ஓடம் ஏறியது
உன் படுக்கை அறையில்
பாம்பு தூங்குகிறது
உன் சொகுசு வாகனம்
குளத்தில் ஒதுங்கியது
உன் கணினியும் காய்கறியும்
கரை தேடுகிறது
உன் குழந்தையின் கல்வி
தூரம் நிற்கிறது
உன் பதவி பணம் பவுசு எல்லாம்
பாதி குறைந்து
மீதியாய் நிம்ம
தட்டு தடுமாறி போய் ..
வியர்வையை விற்றேன் விலகவில்லை
உரு குலைந்து போய் ..
உதிரத்தை விற்றேன் விலகவில்லை
சிதைந்து போய்
சிறுநீரகம் விற்றேன் விலகவில்லை
உடைந்து போய்
உடலுறுப்பை விற்றேன் .. ம் .. ம்
விலகியது
வறுமை அல்ல உயிர் !
--சுதா கண்ணன்
வேர் கடலை வியாபாரத்தை கூட
வியர்க்க வியர்க்க செய்பவனால் தான்
வேர் விட முடியும் தொழிலில் ..!
..சுஜிமோன்
நிறம் மங்கா
வானவில் அவள் !
நீங்காத
விண்மீன் போன்றவள் !
தரம் குன்றா
தங்கமும் அவள் !
தரணியில் ஏன்
தனிமையில் அவள் !
இது தேன்
தெரிந்தும் வெறுப்பவர்
மண்ணில் பலர் !
முன் நிற்காதே
முறைவாசல் செய்யாதே
முந்தி செல்லாதே
முன் விழக்கு ஏற்றதே !
பூவுக்கு தூரம்
பொட்டுக்கு தூரம்
புடவைக்கு தூரம்
மனிதன் மடமைக்கு
மட்டும் பக்கம் !
இவை
அத்தனை வேண்டின்
மறு மாலை வேண்டும் !
உங்கள் துறத்தல்
இனி அவளுக்கு வேண்டாம்
மறு மாங்கல்யம்
மகத்தானது தான்...
பாவம்
ஒரு மாரின் மணம்
மறு மாரில் தேட மாட்டாள்
காரணம்
விதவையும் வெட்கபடுவாள்!
-சுஜிமோன்
நேரம் கடந்த வார்த்தைகள்
தூரம் சென்ற வாழ்க்கை போல்
பாரம் தரும் சுமைதான் மீதம்!
நாளை நாளை என நம்பிக்கை கொண்டேன்
தினம் நாள் கருத்தது வந்த வாழ்கை போல்
கடும் இருள் தான் மீதம்!
தேவாரம் தேடி திசையலைந்தேன்
தாழ்வாரம் கூட ஏழிசைத்தது
பூவாரம் புகுந்த நாகம் போல்
உயிர் சென்ற தேகம் தான் மீதம்!
ஒத்தி வைத்த நாட்கள் என்னையும் ஒத்தி வைத்தது!
1.அறக்கட்டளையின் பரிசு பெறும் படைப்புகள் மீதான ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமே....
2. ஆண் ,பெண் .திருநங்கை என தனி பரிசுகள்..
3. ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பு மட்டும் என....கவிதை ,கதை ,கட்டுரை என தனியே...
4.நேரடி மொழி பெயர்ப்பு மட்டுமே...
நான் நீ என்று நாட்கள் பிரிவதில்லை
நாம் தான் பிரிகிறோம்
நாட்கள் வரலாறு ஆகிறது
நாம் வடிவம் பெறாமல் சாகிறோம் !
சுதா கண்ணன்