குலசை

குலசேகரத்தான் இம் மண் அரசே
பெயர் காரணம் இதுவே..

கண் கொண்டு காக்கும்
வேதமுத்துமலை அம்மன் என்பர் சிலர் ..
கணினி கொண்டு வான் ஆயும்
ISRO என்பர் சிலர் ....

சுழலும் பம்பரத்தில்
ஆண்மீகம் தேடுவதும்
அறிவியல் தேடுவதும்
அறியாமை அல்ல ...
சொல்வது குலசை !

கடல் காளி , கருமாரி
தாய் வாழும் ஊரே ..

நிலம் காக்க , நிழல் காக்க
கணை ஏவும் ஊரே ..

பனை உண்டு , பதம் உண்டு
வினை தீர்க்க துணை உண்டு
தசரா கொண்டாட்டம் தரணியின்
புகழ் உண்டு ...

செம்மொழி சீர் உண்டு
வஞ்சத்தில் குறைவு உண்டு
சிங்காரம் மேலோங்க
மங்காத பேர் உண்டு..

தெற்கு சீமையில்
நிக்கும் ஊர் இது
குமரி கண்டவர்
குலசை காண்பீர் ..!

--சுதா கண்ணன்

எழுதியவர் : சுதா கண்ணன் (2-Dec-15, 11:56 am)
பார்வை : 143

மேலே