நுரைப்பூ

நுரைப்பூ...!

ஏகாந்த -
வெளியின்...
புவி காந்த -
மேனியில்...
புலர் காலை -
பொழுதின்...
புனல் நெய்த -
நுரையாய்...
கதிர் தந்த -
வெண்மையும்...
காலத்தின் -
நுண்மையும்...
காந்தளின் -
தண்மையும்...
களங்கமிலா -
உண்மையும்...
கலந்து வந்த -
மென்மையாய்...
காதல் மகள் -
பெண்மையோ...!

எழுதியவர் : இராக. உதயசூரியன். (2-Dec-15, 12:08 pm)
பார்வை : 89

மேலே