ஒத்தி வைத்த நாட்கள்
நேரம் கடந்த வார்த்தைகள்
தூரம் சென்ற வாழ்க்கை போல்
பாரம் தரும் சுமைதான் மீதம்!
நாளை நாளை என நம்பிக்கை கொண்டேன்
தினம் நாள் கருத்தது வந்த வாழ்கை போல்
கடும் இருள் தான் மீதம்!
தேவாரம் தேடி திசையலைந்தேன்
தாழ்வாரம் கூட ஏழிசைத்தது
பூவாரம் புகுந்த நாகம் போல்
உயிர் சென்ற தேகம் தான் மீதம்!
ஒத்தி வைத்த நாட்கள் என்னையும் ஒத்தி வைத்தது!