கற்றவை பற்றவை

பிரியசகிக்கு சந்தேகம்
தீர்த்துவை என்றாள் !
தெரிந்தால் தெளிவிக்கிறேன்
கற்றவை கற்பிக்கிறேன்
கற்பூரமாய் பற்றிக்கொள்
ஐயமென்ன வினவினேன் ....!!

ஆடியிலே புதுஜோடிகளை
பிரிப்பதன் மாயமென்ன ?
மாயமில்லை மந்திரமில்லை
ஆன்றோர் கூற்றில்
அர்த்தம் இருக்கும்
அறிவியலும் இருக்கும் ....!!

ஆடிகூடி கருத்தரித்தால்
சித்திரையில் பிரசவமாகும்
கடும்வெயில் தாக்கம்
தாய்சேயை மிகவாட்டும்
சின்னம்மை முதலான
வெப்பநோய் தாக்கும் ....!!

இன்னொன்றும் சொல்கிறேன்
கவனமாய் கேட்டுக்கொள் !
ஆனிக்கடுத்த ஆடியில்தான்
தொடங்கும் பருவமழை !
காற்று மழைநீரில்
கிருமிகள் பரவிடும் ....!!

உறவில் இணைந்தால்
கர்ப்பத்தில் சிசுவுக்கு
நோய்த்தொற்றும் ஏற்படலாம்
புதுமணத் தம்பதியரை
பிரித்தல் இதனால்தான்
புரிந்ததோ என்தோழி ......???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jul-14, 6:54 pm)
பார்வை : 128

மேலே