கற்றவை பற்றவை

இயேசுவும் அல்லாவும்
புத்தனும் ஈசனும்
சொல்லவில்லை யாருக்கும்
கனவிலும் குற்றமிழைக்க

மதத்தால் சாதியால்
வேண்டாம் சண்டை
பாரில் பண்பாய்
பழகுவோம் என்றும்

நாடும் வீடும்
நாடும் நம்மை
ஒன்றே அனைவரும்
என்பதை உணர்ந்தால்

பகிர்வோம் என்றும்
அக்கம் பக்கம்
அன்பை மட்டும்
அன்றாட வாழ்வில்

ஆனந்தம் கூடிடும்
அன்பிலே திளைத்திட
அண்டைநாடும் அண்டிடும்
பகைதன்னை மறந்து

விடியும் விடியலில்
விரைவாய் இணைந்து
நல்லரசை உருவாக்க
விழைந்து உழைப்போம்

கிடைக்கும் தானாய்
வல்லரசு பட்டம்
எட்டட்டும் நாடெங்கும்
இவ்வினிய திட்டம்


சேர்க்காதே ஆஸ்தியை ,
சேர்த்திடுவோம் அகிம்சையை ....

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (13-Jul-14, 7:18 pm)
பார்வை : 79

மேலே