கற்றவை, பற்றவை- பொள்ளாச்சி அபி -போட்டிக் கவிதை

கற்றதினால் பெற்றதை
சுற்றமறியச் செய்தவன்
குற்றமற்ற புகழுக்கு
சொந்தமாகிப் போனான்.

உற்றவரைக் கிளறிவிட்டு
பெற்றவரைத் தவிக்கவிட்டு
சிற்றறிவாய் சுற்றியவன்
பெயரற்றுப் போனான்.

அரற்றலுடன் பிறந்தோமே
அறிவுடனே வளர்ந்தோமே
காற்றலையாய் பெருகுகின்ற
ஆற்றலையும் வளர்த்தோமே.,

கவியாற்ற எனினும்
செயலாற்ற எனினும்
உனைப் பற்றிக்
குறையொன்றும் இல்லை.,

தீற்றலாய் இருந்தாலும்
தீயாக இரு.
போற்றுவார் போற்ற
தேன் தேற்றலாயிரு.,

இங்கிருந்து பெற்றதெல்லாம்
ஏற்கனவே நீ
கற்றவைதான்.,இனியாவது
சிந்தனையில் பற்றவை.,

பற்றுகளை விலக்குகின்ற
குற்றமற்ற உலகமொன்றில்
மற்றவரை செலுத்திவிடும்
மாற்றமதை விரும்பியவன்
தேற்றுவாரில்லை யெனினும்
தோற்றதில்லை என்று..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (13-Jul-14, 7:35 pm)
பார்வை : 147

மேலே