கற்றவை பற்றவை

பெற்ற அன்னை
உயிர் கொடுக்க‌
கற்ற ஆசான்
கல்வி கொடுக்க‌
கற்ற தமிழ்
கவி கொடுக்க‌
நாட்டில் ஆங்கிலம்
தலை விரித்தாட
உண்மையை உணர்ந்து
தமிழை நேசி
தளம் நம்மை
வழி நடத்தும்
நம் தேசம்
பரந்த தேசம்
ஆசைப் படு
பேராசைப் படாதே
உண்மை பேசு
உலகம் போற்றும்
புகை பழக்கத்தை
பூமியிலே பொசுக்கு
தீய எண்ணத்தை
தீயிட்டு கொளுத்து
அர்த்தம் புரிந்து
அளவோடு பேசு
நம் நாட்டின்
கலாச்சாரத்தை மதி
அன்னையை மதி
ஆசிரமம் தேடாதே
அன்னிய மோகத்தால்
அவதிப் படாதே

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (13-Jul-14, 7:41 pm)
பார்வை : 111

மேலே