அரிது அரிது
அரிது ! அரிது!
இவை எல்லாம்
காண்பது அரிது !
இமைக்காத மனிதன் ,
இளைக்காத நிலவு
களிக்காத உறவு !
சலியாத மனது
இனிக்காத மழலை
உழைக்காத எறும்பு
குறைக்காத நாய் !
அழுவாத மேகம்
அது இல்லாத வானம்
அக்னி இல்லாத யாகம் !
உதிராத மலர்
உறையாத உதிரம்
ஓடாத முயல்
நீந்தாத கயல் !
வளையாத நாணல்
கொட்டும் மழைக்குப்பின்
குரலெழுப்பாத நுணல் !
வெள்ளாமை விளையும்
கடல் மணல் !
இரவில் வளம் வரும்
சிவப்பு சூரியன் !
நிறைவான நினைவுகொண்ட
தெளிவான காரிகை !
கரையாத கழியாத
சிலையான நாழிகை !
கேலி செய்யாத தோழிகள்
ஊழி செய்யாத மானுடம்
தாய்மையை விரும்பாத பெண்மை !
ஏழ்மையை விரும்பும் ஆண்மை !
மேடு நோக்கிப்
பயணிக்கும் நதி !
குறைகளே இல்லாத
மனிதப் பிறவி !
குறை காணாத சுற்றம் !
அரிது ! அரிது !
இவை எல்லாம்
காண்பது அரிது !
வசிகரன்.க