கற்றவை பற்றவை போட்டிக் கவிதை

உண்மை உழைப்பு
ஊதியம் நிலைப்பு

தெளிந்த சிந்தனையில்
சரியான முடிவுகள்

ஒரே நொடியில்
உயிரும் போகும்

கொட்டிக் கொடுக்காதே
கிள்ளியாவது கொடு

வெறுப்பான நாட்களை
திரும்ப நினைக்காதே

இறைவனை தொழுகையில்
எதனையும் கேட்காதே

நேர்மைக்கே சோதனைகள்
எதிர்கொள்ள சாதனைகள்

உன் உழைப்பினை
முதலாளியுணர செய்

வாழும் வெறியுள்ளவனுக்கு
சுடுகாடும் சொர்க்கம்

விழுந்ததும் எழுந்திடு
மிதிக்கக் காத்திருக்கிறார்கள்

எதிரியின் எதிரினில்
எப்போதும் சிரித்திரு

கடனைக் கொடுத்தவர்கள்
காலத்தில் வசூலியுங்கள்

பொறாமை கொண்டவரிடத்தில்
வளர்ச்சியை பேசாதே

துன்பம் பாடமாகிறது
அனுபவம் ஆசானாகிறது

கற்றதை பகிர்கிறேன்
பற்றலில் பலனுண்டு

எழுதியவர் : சொ. சாந்தி (13-Jul-14, 6:32 pm)
பார்வை : 128

மேலே