சுகமா சுமையா வாழ்க்கை
தவமாய் பிறந்தேனடா!
நலமாய் வளர்தேனடா !
என்னுள் வாலிபம் வன்ததடா !
வாசமும் பாசமும் நுகர்தேனடா !
வசதியாக வளர்த்தவர்கள் அங்கே!
வறுமையை தடுக்க விலகினேன் இங்கே!
நாட்கள் ஓடுதடா அங்கே !
நாகரிகம் துரத்துதடா இங்கே !
பலரிடம் மாற்றம் கண்டேனடா!
பணமில்லாத காரணம் அறிந்தேனடா!
குணம் கண்டு வாழ்த்துபவர் அங்கே !
பணம் கண்டு வணங்குவோர் இங்கே !
பாடுபட்டு களம் வாங்க நினைத்தேனடா !
கடவுளிடம் நலம் காக்க மறந்தேனடா!
அவசர சிகிச்சை குட
அனுமதி சீட்டு கேக்குதாடா இங்கே !
உள்ளே மனம் துடிக்கிதடா !
வெளிய பணம் பார்க்க தடுக்குதடா இங்கே !
என்னை மகனாக பெற்றவன் தவிக்கிரானடா !
எனக்கு மகனாக பிறப்பவன் நலம் வாழ நினைக்கிறேனடா !
உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லையடா !
பணம் இல்லாத வாழ்க்கை ஊனமடா !
முயற்சி செய்து ஒடுவேனடா !
முடியும் வரை பாடுபடுவேனடா!
இதுவரை நான் கடந்தது உணர்ந்தேனடா !
இனி அடைய போவதையும் அறிவேனடா !
யானைக்கு பலம் தும்பிக்கையடா !
எனக்கு பலம் நம்பிக்கையடா!....
வெற்றி ....
தொடரும் வளரும் படரும்.......