பசி
![](https://eluthu.com/images/loading.gif)
நிரம்பிவழியும் பாத்திரத்தை போல
நிஜமாக
நிரம்புவதே இல்லை......
சோறு சமைத்தவனின்
பசித்த வயிறு
பரிமாறிப்போகையில்
பசியும் சேர்த்தே
பரிமாறப்படுகிறது இலைகளில்
நிரம்பி வழியும் பாத்திரத்தை
பார்த்து பார்த்தே
பசியடங்கிப்போகிறது
சமைத்தவர்களுக்கு.......!!!
அன்னமிட்டவனுக்கு அன்னமிடுவதில்தான்
அத்தனை போராட்டங்களும்
அடுக்கடுக்காய் தொடர்கின்றன ........
கவிதாயினி நிலாபாரதி