மழை சொன்ன பாடம்

கட்டிடம் நீச்சல் பழகுகிறது
கட்டியவன் படகு பயணத்தில் ..!

காகித கப்பல் நான் மழையில்
விட்டு இருக்கிறேன் மழலையில்,

இன்றோ மழையால் கட்டுமரம் கரையில்
மிதக்கிறது ..!

கண்டேன் கலங்கிய விழிகொண்டு ..!

ஆற்றின் குறுக்கே அணை போல்
வீடுகள் .. நதி வாழும் இடத்தில்
நான் வாழ்வேன் என்றல்
விதி என்ன செய்யும் ..

இன்றோ ..

உன் காகித கப்பல்
ஓடம் ஏறியது
உன் படுக்கை அறையில்
பாம்பு தூங்குகிறது
உன் சொகுசு வாகனம்
குளத்தில் ஒதுங்கியது
உன் கணினியும் காய்கறியும்
கரை தேடுகிறது
உன் குழந்தையின் கல்வி
தூரம் நிற்கிறது
உன் பதவி பணம் பவுசு எல்லாம்
பாதி குறைந்து

மீதியாய் நிம்மதி போதும் என்கிறது..!

பாவம் நீ ..

அன்று
ஏளனமாய் பார்த்த
அரசாங்க பள்ளியில் தான்
இன்று ஆறுதலாய்
தூங்குகிறாய் ...



..சுதாகண்ணன்

எழுதியவர் : சுதாகண்ணன் (2-Dec-15, 10:44 am)
பார்வை : 113

மேலே