விதவையும் வெட்கபடுவாள்

நிறம் மங்கா
வானவில் அவள் !
நீங்காத
விண்மீன் போன்றவள் !
தரம் குன்றா
தங்கமும் அவள் !
தரணியில் ஏன்
தனிமையில் அவள் !

இது தேன்
தெரிந்தும் வெறுப்பவர்
மண்ணில் பலர் !

முன் நிற்காதே
முறைவாசல் செய்யாதே
முந்தி செல்லாதே
முன் விழக்கு ஏற்றதே !

பூவுக்கு தூரம்
பொட்டுக்கு தூரம்
புடவைக்கு தூரம்
மனிதன் மடமைக்கு
மட்டும் பக்கம் !

இவை
அத்தனை வேண்டின்
மறு மாலை வேண்டும் !

உங்கள் துறத்தல்
இனி அவளுக்கு வேண்டாம்

மறு மாங்கல்யம்
மகத்தானது தான்...

பாவம்
ஒரு மாரின் மணம்
மறு மாரில் தேட மாட்டாள்
காரணம்
விதவையும் வெட்கபடுவாள்!


-சுஜிமோன்

எழுதியவர் : சுஜிமோன் (27-Aug-14, 7:31 pm)
பார்வை : 104

மேலே