வளர்ந்த விதமும் வளர்த்து இருக்க வேண்டிய விதமும் -
நான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ரொம்ப எளிமையா ஒரு உதாரணம் சொல்றேன்.. !!
நான் சென்னை வந்த பிறகு என்னோட வாழ்நாள் சாதனையா முன்னாடி இருந்த விஷயம் என்ன தெரியுமா ?
நான் தனியா பேருந்துல, வீட்டுல இருந்து (போரூர்) அலுவலகத்துக்கு வந்தது தான்.. !! இப்ப கூட அடிக்கடி
அதே நெனைச்சி சிரிப்பேன்.. !!! :-P
இந்த உதாரணத்தை ஒரு புன்னகையோட அணுகலாம்.. !! இல்லன ஒரு கேள்விகுறியோடு அணுகலாம்.. !!
அதே மாதிரி சென்னை வந்த புதுசுல எல்லா பசங்களை பாத்தாலும் உள்ள ஒரு பயமாவே இருக்கும்.. !! படிக்கிற எல்லா
ஆண்களும் கோப பட வேண்டாம்.. !! இன்னும் உங்க சகோதரி இந்த கட்டுரையை முடிக்கல.. !! :-)
எனக்கு எங்கயும் தனியா போக தெரியாது.. !! பசங்க நாளே பயம்.. !! weekend வெளிய போறதா ?? அய்யயோ..!!
யாரது எதாவது பண்ணிருவாங்க ..!! :-P
எங்கயாது என்னை வெளிய தனியா போக சொல்றது தான், எனக்கு தர மிக பெரிய ரெண்டாவது தண்டனை.. !(முதல் தண்டனை சாப்பிட சொல்றது.. ! :-))
Theatre போறது பாவமான ஒரு செயல்.. !! ஒரு பையன் கிட்ட பேசுறது மாதிரி தவறான செயல் உலகத்துல வேறதுவும் இல்ல.. !! பொண்ணு எப்டி வெளிய சுத்தணும் அப்டின்னு நெனைக்கலாம்.. !?! வீட்டுக்குள்ள இருந்தா மட்டும் இப்ப என்ன?, துப்பட்டாக்கு ஊக்கு(safety bin) குத்த முடியாதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கா? இது எல்லாம் தான் நான் வளர்ந்த விதம்.. !!
ஆனா நான் இப்ப மட்டும் ரொம்ப மாறிட்டேன் அப்டின்னு சொல்ல முடியாது.. !! ஆனா நான் என்னை எப்டி மாத்திகிட்டேன்.. எதுனால மாத்திகிட்டேன்.. ? நம்ம வீட்டுல போடுற அடக்கு முறைல எது தேவை ? தேவை இல்லன்னு? நான் அலசுனதுல வெளுத்த பதிப்பு தான் இது.. !!
அப்பா அண்ணா தவிர உலகத்துல உள்ள பையன் எல்லாம் கெட்டவனு எங்க வீட்டுல என்னை வளர்த்த விதம்.. ?? அது ரொம்ப தவறான ஒன்னு தான்.. !! 1000- பேர்ல ஒரு 5 பேர் அப்டி இருக்கலாம்.. !! மத்த படி நான் அண்ணா அப்டினா என்னை தங்கச்சியா பாப்பாங்க ..!! நண்பன்- அப்டினா தோழியா அரவணைப்பாங்க..!! இந்த அழகான ஒரு விசியத்தை நான் உணர 4 வருஷம் ஆச்சி.. !! பேசுன தானே தெரியும்.. !??
- கெட்டவங்களும் இருக்காங்க தான், அதே இப்டி புரிஞ்சிக்கலாம் அப்டின்னு சொல்லி இருந்துக்கலாம்.. !!
எங்கயும் தனியா அனுப்பாமா, தனியா போனாலும் எதாவது ஆகிரும் அப்டின்னு, பாசத்தோட அம்மா பயத்தையும் ஊட்ட சென்னைல என்னோட தேவைகளுக்கு கூட என்னால தனியா போக முடியாம போச்சி.. !!
இப்ப நான் தனியா போனாலும்.. உள்ளுக்குள்ள நான் உணர அந்த கொடூரமான நடுக்கம் அது என்னைக்கும் போகாது.. !!
ஒரு குழந்தைய வளக்குற வளர்ப்பு எப்டி இருக்கணும் அப்டினா, அந்த பாதைல அங்க மேடு இருக்கும்.. இங்க முள்ளு இருக்கும்.. இந்த பாதை நல்லா இருக்கும் அப்டின்னு பகுத்து அறியிற பக்குவத்தை அந்த பிள்ளைக்கு உணர வைக்கிறதா இருக்கணும்.. !!
அந்த பாதையே வேண்டாம் அப்டின்னு சொல்லி தர ஒண்ணா இருக்கா கூடாது.. !!
என்னோட வாழ்க்கைல வீட்டுல அடம் பண்ணி நான் எடுத்த ஒரு முடிவு சென்னைல வேலை பாக்கணும் அப்டி தான்.. !!
அந்த முடிவே நான் அன்னிக்கி எடுக்கல அப்டினா.. , என்னோட பிள்ளைக்கி எனக்கு உண்டாகுற இந்த நடுக்கத்தை, நான் பரிசா தந்து இருப்பேன்.. !!!
பெண் குழந்தைக்கு சுதந்திரம் கொஞ்சம் குடுங்க.. !! ஆண்களை பிரிச்சி பாக்குற அளவு பக்குவ படுத்துங்க.. !!
பொண்ணுகள பொறுத்த வரை அம்மா அப்பா-வோட வளர்ப்பு ஒன்னு தான் அவங்க வாழ்க்கை.. !!
குட்டி பாவாடை போட்டு சுத்துற அளவு தர சுதந்திரம் கண்டிப்பா தேவை இல்லை தான்.. !! ஆனா சுடிதார்-ல இருந்து ஒரு குர்தி-கு மாறுற அளவு சுதந்திரம் குடுங்க.. !! ஆனா இப்ப நிறைய மாறிட்டு இருக்கு தான்.. !! ஆனாலும் சில கண்மூடித்தனமான வளர்ப்பை இன்னும் நான் பாக்குறேன்.. !! பொண்ணுக்கு தைரியம் வேணும்.. !!
சுத்தமா தைரியமே இல்லாத நாளா நான் பட்ட கஷ்டம் நாளா இத சொல்றேன்.. !!
நம்ம குடும்பத்துல இருந்து வர மாதிரி தான் எல்லா குடும்பத்துல இருந்தும் ஒரு பையன் வந்து இருப்பாங்க.. !!
அவங்களுக்கும் பொறுப்போடு கூடிய மரியாதை எல்லா பெண்களிடமும் இருக்கும்.. !!! :-)..!!
எல்லார்டயும் பேசுங்க. .அப்போ தான் வாழ்க்கையோட பல பரிணாமங்களை புரிஞ்சிக்க முடியும்.. தைரியம் ஒன்னு தான் பெண்களோட ஒரே ஆயுதம்.. !!
-மாற்றங்களை தேடி..