சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 30 நீ த ய ராதா - ராகம் வஸந்த பைரவி

'வஸந்த பைரவி' என்ற ராகத்தில் அமைந்த ' நீ த ய ராதா' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

உனது தயை வராதா?

வேண்டாம் என்று உன்னைத் தடுப்பவர் யார்? கல்யாணராம!

என்னைக் காப்பாற்றுபவன் நீயெயென்று அன்றே எனக்குத் தெரிந்திருக்கையில் இவ்வளவு தாமதம் ஏன்? சூரியகுல திலகனே!

அனைத்திற்கும் அதிகாரி நீயெயென்று நான் புகழும் பொழுது என்னைக் காப்பாற்றுவது உன் மகிமைக்குக் குறைவா?

ராம! ராம! தியாகராஜனின் உள்ளத்தில் உறைபவனே! என் மனம் தத்தளிப்பது நியாயமா? விரைவில் (உன் தயை வரலாகாதா?)

பாடல்

பல்லவி

நீ த ய ராதா (நீ)

அநுபல்லவி

காத நேவா ரெவரு கல்யாணராம (நீ)

சரணம்

1. ந நு ப்ரோசேவாட நி நாடே தெலிய
இநவம்ச திலக இந்த தாமஸமா (நீ)

2. அந்நிடி கதி காரிவநி நே பொ க டி தே
மந்நிஞ்சிதே நீது மஹிமகு தக்குவா (நீ)

3. ராம ராம ராம த்யாக ராஜ ஹ்ருத்ஸத ந
நாமதி தல்லடி ல்லக ந்யாயமா வேக மே (நீ)

Abhishek Raghuram | Nee Daya Raada | Vasant Bhairavi | Rupak Taal | Idea Jalsa – Coimbatore என்று வலைத்தளத்தில் பதிவு செய்து அபிஷேக் ரகுராம் இப்பாடலை அருமையாகப் பாடுவதைக் கேட்கலாம்.

Nee dayarada - Rare Ragas Of Thyagaraja என்று வலைத்தளத்தில் பதிவு செய்து சித்ரா என்ற பாடகி பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-15, 1:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 102

சிறந்த கட்டுரைகள்

மேலே