மறுபாதி கவிதையிது

..."" ""...

பாட்டன் பூட்டன் என்று வழி
வழியாய் வந்த சொத்துக்கலேன
எதுவுமில்லை சொந்தங்கள்
கைகொடுக்க அவர்களின்
கரங்களும் வலுவாயில்லை ,,,

பட்டங்கள் படித்தாலுமே
பாரதத்தில் வேலையில்லை
வீணடிக்கவேண்டாம் காலத்தையென
பட்டறிவு போதுமென்றே
தாயகம்விட்டு தனியாய் நான் ,,,

மொத்தமாய் மூட்டைகட்டி
முடித்துவிட்டு வரலாமென்றே
முனைப்போடு நானில்லை
வருகின்ற வருமானமோ
வாயிக்கும் வயிற்ருக்கும் ,,,

எனக்கும் எண்ணமுண்டு உன்
சேலையில் முகம்புதைக்க
மாரோடு சாய்ந்தே மனக்கவலை
மறந்து மயங்கியே கிடக்கவும்
ஆசையுண்டு அன்பினியவளே ,,,

காதலில் கலந்துவிட காதலியே
எனக்கும் கடலளவு ஆசைதான்
காசுபணம் இல்லையென்றால்
காலப்போக்கில் கசந்துவிடு
காத்திருந்த காதலும்மங்கே ,,,

காத்திருப்பது நீ மட்டுமா
நானும்தானே வீட்டிருக்கிறேன்
சொன்னதிங்கு கடுகளவே
சொல்லாமல் மறைந்திருப்பதோ
இமயமலையின் முழு அளவு ,,,

நாம் படுகின்ற வேதனைகள்
நம்மோடு போகட்டும் வரும்
நம் தலைமுறையேனும்
தாயகத்திலேயே வாழட்டும்
அதற்கே இத்தியாகம் அன்பானவளே ,,,

சொல்ல முடியவில்லை இதை
சொல்ல முயலுகையில் கண்ணீர்
கண்களுக்கு திரையிடுகின்றது
நம் சந்ததியை நினைத்தே இன்றும்
நம்மிடம் சமாதான பெருமூச்சு,,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (17-Jan-15, 12:46 pm)
பார்வை : 1133

மேலே