முஹம்மது சகூருதீன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முஹம்மது சகூருதீன் |
இடம் | : தமிழ்நாடு (இராமநாதபுரம்) |
பிறந்த தேதி | : 29-Sep-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 2612 |
புள்ளி | : 422 |
எல்லாம் இறைவன் செயல்,,,\r\n\r\nஎன் இயற்பெயர் : முஹம்மது சகூருதீன்\r\nசொந்த ஊர் : பனைக்குளம் \r\nமாவட்டம் : இராமநாதபுரம் \r\nமாநிலம் : தமிழ்நாடு \r\nதேசம் : இந்தியா \r\n\r\nதிரவியம்(சம்பாதிக்க) தேட கடல்தாண்டி சவூதி அரேபியாவை வேலை செய்கிறேன்,
..."" முத்தம் அகிம்சை யுத்தம் ""...
காகிதத்திலே அச்சடித்து
கழுதையாய் அதைசுமந்து
கருணையினை கைகழுவி
காட்டுமிராண்டியாய் வாழ ,,,
உண்மைகளை கொன்று
உள்ளதெல்லாம் தனக்கென
ஊரையடித்து உலையிலிட்ட
உள்ளமில்லா ஊமைகளே ,,,
இதழ்கள் போதையில்
இளைப்பாறும் இளைஞரே
இவ்விதழிலே ஒளிந்துள்ள
இனிமையை அறிவாயோ ,,,
தீண்டுகின்ற இதழ்களில்
தீண்டாமையை எரிக்கும்
தீர்வை நோக்கி நடத்தும்
தீவிர அகிம்சை யுத்தமிது ,,,
ஆயிரமாயிரம் ஆசைகளின்
ஆணிவேரின் உறவுகளாய்
ஆதரிக்கின்ற இணைப்பாய்
ஆளுமையின் முத்தமிது ,,,,
அன்பை அடித்தரையாக்கி
அரவணை உறைவிடமாக்கி
ஆறாம் அறிவையும் நாம்
அழியாமல் காத்திடுவோம்
..."" வாழ்க்கையின் முழுமை ''''...
வருத்தமே என்றாலும்
வசந்தமே என்றாலும்
துணையாய் நானென
தோள்சாயும் சொந்தம் ,,,
வாழ்க்கை பாதையின்
முழுப்பாதியும் அவளே
சிறுச்சிறு கற்களும் உண்டு
சிறந்ததோர் காதலுமுண்டு,,,
லப் டப் ஒலியை மாற்றி
லவ் டாப் என்றவாறே
என் இடப்பக்கத்தில்
இதயமாய் துடிப்பவள் ,,,
ஆயிரமுறை பருகினாலும்
ஆனந்தத்தின் எல்லையதை
அள்ள அள்ள குறைந்திடாத
அமுதசுரபி அவளன்றோ ,,,
சிணுங்களில் சிறைபிடித்து
சீண்டலில் அரவணைத்து
தீக்குச்சியை உரசியவள்
பனிபோல் குளிர்வித்தாள் ,,,
விழியசைவில் காதலும்
மெளனத்தால் கதைகளும்
கட்டிலறை கோட்டையில்
முடிசூடும் ராணியவள் ,,,,
..."" புன்னகையின் இரகசியம் ""...
வசந்தத்தின் வாசலென்று
தலைமீது தூக்கிவைத்து
எல்லையிலா இன்பத்தில்
இருக்கின்ற வேளையிலே ,,,
அன்பினின் அடையாளம்
இனம்காண முடியாமல்
கண்களை குத்தியே நீ
கண்ணீரை சோதித்தாய் ,,,
நேசத்தின் நெஞ்சத்தை நீ
வஞ்சகமே கொன்றுவிட்டு
வாடிக்கை விளையாட்டாய்
வாய்க்கருசி போட்டாயே ,,,
ஏளனமான சிரிப்புக்கும்
எதிர்மறை பேச்சுக்கும்
ஏகாந்தத்தின் தாக்கத்தை
ஏன் தந்தே சென்றாயோ ,,,
சொல்லாத சொல்லுக்கு
இந்நாளும் வேதனையே
வேண்டாம் இச்சோதனை
எதிருக்கும் பிராத்தனையே ,,,
வருத்தத்தை வெளிக்காட்ட
வடிகாலின் இடம் நாடி
வார்த்தைகளை தேடியே
வக்கத்துப் பேனேன்னான் ,,
..."" காதல் காதல் காதல் ""...
காட்டாற்று வெள்ளமாய்
கரைபுரண்ட காலத்தில்
பார்வைகள் பரிமாற்றம்
பாவனைகள் பதிலாகும் !!!
கோடையில் வசந்தகாலம்
பனிக்கட்டியும் சூடாக்கும்
மலைகளும் சிறு கடுகாகும்
மல்லிகையும் கணமாகும் !!!
என் சுவாசமாய் உள்சென்று
பொன் வாசமாய் மணத்து
குருதியின் குழாய்களுக்குள்
ஊடுருவிய உயிர் தமனியாய் !!!
சொல்லமுடியாத தவிப்பும்
சொல்லிவிட்டால் களிப்பும்
வெகுதூரத்து பசுமையாய்
என் பக்கத்திலே இருக்கும்!!!
இனம் புரியாத அனுபவம்
இடமறியாமல் துடிக்கும்
மனதிற்குள் பூக்கள் தூவி
மற்றும்மொரு இதயமாய் !!!
வாலிபத்திலே முளைத்தது
வயோதிகத்திலே நிலைத்து
சோகங்களை
..."" விளக்கு கலங்கரை விளக்கு ""...
திசைதெரியா திரைகடலில்
திரவியத்தை தேடிவிட
துணிவின் துணையோடும்
துடுப்பின் இணையோடும்
உந்தனின் வழிகாட்டல்,,,
நிலத்தின் நிலவாக நீ
கடலுக்குள் சென்றோரை
பத்திரமாய் வரவழைக்க
கடல்கரையின் வாயலில்
ஒற்றைக்கால் தவமிருப்பு,,,
அஃறிணையின் அன்புள்ளம்
அரவணைக்கும் பண்போடு
வாராய் நீ வாராயென்று
அலைமீதே ஒளிபதித்து
கண்களை சிமிட்டுகிறாய் ,,,
தொடர்பு எல்லைக்கும்
அப்பால் அன்னம்தேடி
ஆழ்கடலின் பயணம்
வழிகாட்ட காத்திருப்பதால்
கவலையில்லை எமக்கு ,,,
ஒளிகாட்டும் உயர்ந்தவனே
உன் சேவைக்காய் நாம்
சின்ன பெரிய அலைகளை
தூதுவிட்டு உன் கால்களை
முத்தம
..."" வாய்மொழிந்த முதல் கவிதை ""...
உன்னை வயிற்ருக்குள்
எட்டி உதைத்தும் அதை
தொட்டுப்பார்த்து ரசித்தவளே !!!
உன்னுயிரை பணயமாக்கி
என்னை ஈன்றெடுக்க நீ
இன்னல் பல பட்டாலும் !!!
எல்லாம் மறந்து பிஞ்சு
விரல்தொட்டு என் சின்ன
புன்னகையில் மகிழ்ந்தாயே !!!
உன் உதிரத்தை பாலாக்கி
எனக்கு உண்ணத்தந்தே
உள்ளம் உவகை கொண்டவளே !!!
என் செய்வேன் கைமாறாய்
எனை ஈன்ற நல்லவளே
தமிழோடு தாயே உன்னை !!!
அழுகையின் ஆனந்தத்தில் நான்
வாய்மொழிந்த முதல் கவிதை
அம்மா அம்மா அம்மா அம்மா !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....
..."" ஒற்றை மாமரத் தோட்டம் ""...
இது ஆபாச கவியல்ல
நாவினில் எச்சிலூற
உன் ரசிப்பினில் தெரியும்
ருசிப்பத்தின் சுவைகள் ,,,
மறக்காத நினைவுகளை
மனதோடு சுமந்துவர
மலரும் நினைவுகளாய்
வசந்தமே வீசுகிறாய் ,,,
பார்க்கும் பார்வையில்
கிறங்கியே கிளர்ச்சியூட்ட
சிந்தும் மழைத்துளியும்
வழுக்கியே தடுக்கிவிழ ,,,
மலர்ந்திட்ட இதழின்
சுணை சிந்தும் தேனதை
சிந்தாமலே ருசித்துவிட
நாவதும் துடித்திட ,,,
கொத்தாய் தொங்கிடும்
இலை மூடிய கனிகளை
இமைக்காமல் நோக்கையில்
நானுமொரு குழந்தைதான் ,,,
இளமை முதிர்ந்தந்த
இடைகீறிய காயதனை
உப்பிட்டு படியலாக்கி
வெப்பமூட்டி வெக்கிட்திட ,,,
தொட்
.."" ஆசை ஆசையாய் ஆசைகள் ""...
எதை நான் சொல்லிவிட
பிறந்ததில் இருந்தே
நிகழ்காலம் இன்றுவரை
எத்துனை எத்துனையாம்
சின்ன பெரிய ஆசையின்
கவர்ச்சியான வலையிலே
நாமே மாட்டிக்கொண்டோம்,,,
கவலைகளை துரத்தி
சிரிக்கவும் ஆசைதான்
எதிர்கால வாழ்கையை
சிந்திக்கவும் ஆசைதான்
சிறகடிப்பதும் ஆசைதான்
சீர்படுத்தவும் ஆசைதான்
சீரழித்ததும் ஆசைதான் ,,,
ஆசைகள் இருக்கும்வரை
அழகானதே வாழ்க்கை அது
பேராசையாகிபோவதனால்
நாம் தடுக்கி விழுந்ததும்
இந்த ஆசையில்தான்
தடம்மாறியே போனதும்
அந்த ஆசையில்தான் ,,,
நாம் போராடி போராடியே
இன்னும் தீண்டா ஆசையாய்
நெஞ்சினை நெருடுகின்ற
நிறைவேறாத ஆசைகள்
நித்தம
மூன்று மாதக் கைக்குழந்தை பசியால்
கதறி அழுகிறது.பால்புட்டி வாங்க காசில்லை.
மாங்கல்யத்தையும் பிடுங்கி சென்று பியர் பாட்டிலில்
கணவன் நனைகிறான்.தாயும் சேயும் கண்ணீரால் நனைகிறது.
ஆயிரம் பயணிகள் ஏற்றிவரும்
பேருந்து எவனோ ஒருவனின்
போதையால் நெடுஞ்சாலையில்
கட்டுப்பாடிடந்து மரண ஓலை எழுதுகின்றது.
மது என்றால் பாவம்.உள்ளுக்குள்
சென்றால் மகளும் தெரியமாட்டாள்,
எத்தனை பாலியல் வெறியாட்டம்
அத்தனையும் மதுவின் சதியாட்டம்.
பள்ளிக்கூடத்தருகில் போதை விளம்பரங்கள்
நாளைய தலைவர்கள் சாதனையை
சாதிக்கச் செல்வது நெடுந்தூரம் என்றாலும்
போதையை நாடிச்செல்வது இலகுவானது.
வைத்தியசாலை,கோயில்களுக்கு அ
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
..."" இழந்ததால் இல்லாதுபோனோம் ""...
இருப்பதனை வைத்துக்கொண்டு
இன்பமாகவே வாழ்ந்திடலாம்
என்றேதான் நாம் சொன்னாலும்
எதார்த்தமதுகிடையாது வாழ்வில்
உள்ளதை உள்நாட்டில் அடகுவைத்து
வெளிநாட்டு சுதந்திர அடிமைகளாய்
இருந்ததை நாமே தொலைந்துவிட்ட
இல்லாததை தேடியே செல்கிறோம்
வார்த்தையில் சொல்லமுடியா சோகம்
என்றும் சொல்லில்லடங்காததும் கூட
நெஞ்சம் சுமந்த பாசமதை அழுகவிட்டு
சம்பாதித்த பணமிங்கு சிரிக்கிறது,,,,
திரும்பி வந்துவிடவே ஆசையிருந்தும்
ஆயிரம் தேவைகளால் தோற்றுவிட்ட
உள்ளமதை தேற்றிக்கொண்டே ஓட்டை
படகாய் வேதனைகளோடு ஓய்வின்றி
தளர்ந்து தலைமுடியும் நரைத்துவிட
எம் தலைமுறையின் நிலையிருப்பை
சர