வாய்மொழிந்த முதல் கவிதை

..."" வாய்மொழிந்த முதல் கவிதை ""...
உன்னை வயிற்ருக்குள்
எட்டி உதைத்தும் அதை
தொட்டுப்பார்த்து ரசித்தவளே !!!
உன்னுயிரை பணயமாக்கி
என்னை ஈன்றெடுக்க நீ
இன்னல் பல பட்டாலும் !!!
எல்லாம் மறந்து பிஞ்சு
விரல்தொட்டு என் சின்ன
புன்னகையில் மகிழ்ந்தாயே !!!
உன் உதிரத்தை பாலாக்கி
எனக்கு உண்ணத்தந்தே
உள்ளம் உவகை கொண்டவளே !!!
என் செய்வேன் கைமாறாய்
எனை ஈன்ற நல்லவளே
தமிழோடு தாயே உன்னை !!!
அழுகையின் ஆனந்தத்தில் நான்
வாய்மொழிந்த முதல் கவிதை
அம்மா அம்மா அம்மா அம்மா !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....