விடுகதை - வாழ்க்கை - இபானு
நிமிடங்கள் வருடங்களாக நீள்கிறது
வெளிநாட்டுக்கைதியின் -
சிறைக்கதவு இன்னும் உடைக்கப்படவில்லை,
பாவம் பாலைவனத்து ஒட்டகம்
ஊர்ந்து போகிறது - எப்போது
அருவியை சென்றடைவது,
தேகம் முழுவதும் அரபு நாட்டுத்தூறல்
இருந்தும் - அயல் வீட்டு
கூரை மழை போல் வருமா,