காதல் தெய்வம்
* ஐந்தரை அடியில் - ஓர்
அலங்கார நிலா;
பட்டுப் பாவாடையை
வலக்கையில் பற்றி - தடாக
படித்துறையில் நனைக்கிறது
பொற்பாதம் ...!
* ஒருகணம்
திடுக்கிட்ட கோபுரம்;
குறுக்கொடிய குனிந்து
எட்டிப் பார்க்கிறது
மூலஸ்தனம்...
அம்மன் சிலை
உள்ளே
இருக்கிறதாயென...!
* அவன்
ஆராதித்து
வழிபடுகிறான் ;
அவளை
வெளியே...!

