போராட வாருங்கள் மங்கையர்களே பாகம் -2

போராட வாருங்கள்
மங்கையர்களே... (பாகம்-2)

கல்லெடுத்துவிட்டீர்கள்
சினிமாக்காரன் மீதெறிய
எறிவதற்கு ஆளிருக்கு
ஏறெடுத்து பாருங்களேன்!

படத்திற்கு படம் பாடமென
பள்ளிப் பருவ காதலாம்
படுபாதகன் பணம் அள்ள
காமப் பார்வை கையாண்டு
நியாயமான காதலென
நித்தமும் சொல்கிறானே
பிஞ்சுகளில் நஞ்சூட்டும்
இக்குணம் கொண்ட
இயக்குனர்களை கண்டித்து
தண்டிக்க வேண்டாமா?

சோகத்திற்கு குடி
சந்தோஷத்திற்கு குடி
வேலைக்கு குடி
வேளாவேளைக்கு குடி
எதற்கெடுத்தாலும்
குடி, குடியென
அரசு பானத்திற்கு
அற்ப விளம்பரமெடுக்கும்
காட்சிகளை கத்தரிக்க
கடும்குரல் கொடுக்கலாமே!

பொது இடத்தில் புகைபிடிக்கும்
காட்சி சொல்லும் இயக்குனருக்கும்
புகையூதும் நாயகனுக்கும்
ஆயிரமேனும் அபராதம்
விதித்திட வேண்டுமென
விதியெழுத ஒலிக்காதோ
ஓங்கி உங்கள் குரல்கள்?!

ஆபாசம்
அருவெருப்பு
அபத்தமென
அழிந்து போக
அத்தனைக்கும்
அழகிகளாய்
அவதரித்த
சினிமாக்காரிகளும்
பெண்ணினம் தானென்பது
மறந்து போய்விட்டதுவோ?

வளவளப்பாய் நாயகியாம்
பதினெட்டை தாண்டலையாம்
வாக்களிக்க பதினெட்டு
மணம் முடிக்க பதினெட்டு
நாயகிக்கு உடற்கட்டு
சிறுமியை குமரியாக்கி
அரைகுறை ஆடையுடுத்தி
சீரழிவில் தள்ளிவிடும்
கலைத்துறைக்கு கடிவாளம்
கேட்கவொரு நாதியில்லையா?

சிறுமிகளை நாயகியாக்கி
அங்கங்களை ஆபாசமாக்கி
விழிகளுக்கு விருந்தளித்தால்
சிறட்டை நக்கும் நாய்கள் கூட்டம்
பெருகத்தானே செய்யுமம்மா?

பெண்களால் பிரச்சினைகள்
இப்படியும் நடக்கிறதே
போராட வாருவீர்களா
மானமிகு மங்கையர்களே...!
==================
கதிர்மாயா

எழுதியவர் : கதிர்மாயா (27-Dec-15, 2:36 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 99

மேலே