காதல் காதல் காதல்

..."" காதல் காதல் காதல் ""...

காட்டாற்று வெள்ளமாய்
கரைபுரண்ட காலத்தில்
பார்வைகள் பரிமாற்றம்
பாவனைகள் பதிலாகும் !!!

கோடையில் வசந்தகாலம்
பனிக்கட்டியும் சூடாக்கும்
மலைகளும் சிறு கடுகாகும்
மல்லிகையும் கணமாகும் !!!

என் சுவாசமாய் உள்சென்று
பொன் வாசமாய் மணத்து
குருதியின் குழாய்களுக்குள்
ஊடுருவிய உயிர் தமனியாய் !!!

சொல்லமுடியாத தவிப்பும்
சொல்லிவிட்டால் களிப்பும்
வெகுதூரத்து பசுமையாய்
என் பக்கத்திலே இருக்கும்!!!

இனம் புரியாத அனுபவம்
இடமறியாமல் துடிக்கும்
மனதிற்குள் பூக்கள் தூவி
மற்றும்மொரு இதயமாய் !!!

வாலிபத்திலே முளைத்தது
வயோதிகத்திலே நிலைத்து
சோகங்களையும் அழகாக்கும்
சுகமானதொரு வலியே காதல் !!!

இன்றும் என்றும் காதலோடு ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (7-Oct-16, 1:17 pm)
பார்வை : 345

மேலே