முத்தம் அகிம்சை யுத்தம்

..."" முத்தம் அகிம்சை யுத்தம் ""...

காகிதத்திலே அச்சடித்து
கழுதையாய் அதைசுமந்து
கருணையினை கைகழுவி
காட்டுமிராண்டியாய் வாழ ,,,

உண்மைகளை கொன்று
உள்ளதெல்லாம் தனக்கென
ஊரையடித்து உலையிலிட்ட
உள்ளமில்லா ஊமைகளே ,,,

இதழ்கள் போதையில்
இளைப்பாறும் இளைஞரே
இவ்விதழிலே ஒளிந்துள்ள
இனிமையை அறிவாயோ ,,,

தீண்டுகின்ற இதழ்களில்
தீண்டாமையை எரிக்கும்
தீர்வை நோக்கி நடத்தும்
தீவிர அகிம்சை யுத்தமிது ,,,

ஆயிரமாயிரம் ஆசைகளின்
ஆணிவேரின் உறவுகளாய்
ஆதரிக்கின்ற இணைப்பாய்
ஆளுமையின் முத்தமிது ,,,,

அன்பை அடித்தரையாக்கி
அரவணை உறைவிடமாக்கி
ஆறாம் அறிவையும் நாம்
அழியாமல் காத்திடுவோம் ,,,

பல்லாயிரம் முத்தங்களுடன் உங்கள் ,,,,
பனைக்குளம் சகூருதீன்...

எழுதியவர் : பனைக்குளம் சகூருதீன்... (12-Oct-16, 9:05 pm)
பார்வை : 640

மேலே